தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி, பாரதி கோயிலில் இருந்து வீட்டிற்கு வரும் போது வந்த பிரச்சனைகளை சமாளித்து வீட்டிற்கு வர, இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ஆதி, தமிழ் தூங்கி விட்டதால் அவளை தூக்கி வந்து ரூமுக்குள் படுக்க வைத்து விட்டு வெளியே வர, ரத்னம் “கோயிலில் தரிசனம் எல்லாம் நல்லபடியா கிடைச்சதா?” என்று விசாரித்து அனுப்பி வைக்கிறார். பிறகு பாரதி ஆதியை காதலோடு அனுப்பி வைக்க, மரகதம் ரத்னத்திடம் “இந்தக் கல்யாணம் எல்லாம் தேவையா?” என்பது போல் பேசி உள்ளே செல்கிறாள். 


அடுத்து மறுநாள் பாரதி தமிழ் பாப்பாவை ஸ்கூலுக்கு அழைத்து வர, ஆதியும் அங்கு வர, தமிழ் “என்ன பிரென்ட் திடீர்னு வந்திருக்கீங்க?” என்று கேட்க, “இப்போ நீ என் பொண்ணு இல்ல.. உன்னைப் பார்க்கணும்னு தோணும் போதெல்லாம் வருவேன்” என்று சொல்கிறான். தமிழை ஸ்கூலில் விட்ட பிறகு, ஆதி பாரதியை வெளியே அழைத்து செல்கிறான். 


“இதுவரைக்கும் நான் யாரையும் காதலித்தது கிடையாது, அதனால் உன்னை கல்யாணம் வரைக்கும் காதலிக்கனும்” என்று தனது ஆசையை சொல்கிறான். மறுபக்கம் சாரதா மற்றும் அறிவு ரத்னம் வீட்டிற்கு வருகின்றனர். மரகதம் மட்டும் தனியாக இருக்க சாரதா “யார் யாருக்கு பத்திரிக்கை கொடுக்கணும்?” என்னவென்று விசாரிக்க வந்ததாகச் சொல்கிறாள். 


மரகதம் “பாரதி நல்ல பொண்ணு தான், ஆனால் ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவது நல்லது. ஏன்னா என் பையன் பாரதியை கல்யாணம் பண்ணதும் இறந்துட்டான். அப்புறம் துரை ஜெயிலுக்கு போய்ட்டான்” என்று பாரதி ராசி இல்லாதவள் போலவே பேச, சாரதா “இவங்க ஈஸியா நம்ம வழிக்கு வந்துடுவாங்க போல” எனக் கணக்கு போட்டு ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்லி இருவரும் ஜாதகத்தை வாங்கிக் கொள்கின்றனர். 


ரத்னம் இந்த விஷயம் அறிந்து மரகதத்தைத் திட்டுகிறார். ஆதிக்கும் பாரதிக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்கிறார். இதையெல்லாம் பாரதி கேட்டு விட உள்ளே வந்த அவள் மரகதத்திடம் “ஜாதகம் பாருங்க அத்தை, ஆதிக்கு எதுவும் ஆகிட கூடாது” என்று சொல்கிறாள்.  இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.