சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய  எபிசோட் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 


குணசேகரன், ஜனனி மற்றும் அனைவரையும் மீட்டிங் ரூமில் ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக கோபத்துடன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஜீவானந்தம் உள்ளே வர அடியாட்களும் கூடவே உள்ளே வருகிறார்கள். "சரியான திருடன் தான் நீ, வீட்டில் யாரும் இல்லாத நேரமா பார்த்து எங்க அப்பத்தாவோட கைரேகையை எடுத்து என்னோட எல்லா சொத்தையும் அபகரிக்கலாம் என பிளான் பண்றியா?" என குணசேகரன் கேட்க "திருடன் கிட்ட இருந்து திருடுறது தப்பு இல்ல என நினைக்குறேன்" என ஜீவானந்தம் சொல்கிறார். 



கதிர் எகிற இப்படி 'எகிற வேலையெல்லாம் வைச்சுக்கிட்டு இருந்த செதச்சுருவேன்' என்கிறார் ஜீவானந்தம். நாலு அல்லக்கைகள், அடியாட்களை வைச்சுக்கிட்டு ரவுடி தனம் பண்றது நான் இல்லை. என்னோட மனசாட்சி என்ன சொல்லுதோ சமூகத்துக்கு எது நல்லதோ அதை தான் நான் செய்வேன் என்கிறார் ஜீவானந்தம். "அடுத்தவன் சொத்தை ஏமாத்தி செய்ய சொல்லுச்சா உன்னோட மனசாட்சி" என்கிறார் குணசேகரன். இது என்னோட இடம் இங்க கத்துறத நான் அனுமதிக்கமாட்டேன் என்கிறார் ஜீவானந்தம். 


 



எங்க அப்பத்தாவுக்கு நீ சொந்தமா என ஞானம் கேட்கிறான். "சொந்தம் எல்லாம் இல்லை ஆனால் அந்த 40 % சொத்து என்னுடையது. வெளியே பெரிய மனுஷன் போல வேஷம் போட்டுக்கிட்டு வீட்டில பொம்பளைங்கள அடிமையா வைச்சுக்கிட்டு இருக்க உன்ன போல ஆளை எல்லாம் விட்டு வைக்கவே கூடாது" என்கிறார் ஜீவானந்தம்.  நீங்க செய்யுறது சட்டத்திற்கு எதிரான விஷயம். எந்த உரிமையல நீங்க உள்ள வந்தீங்க? அப்பத்தா கைரேகையை எடுத்த தைரியமா? என்கிறாள் ஜனனி. நீ தான் ஜனனியா மா? பாய்ண்ட்டா பேசுவியாமே. உங்க குடும்பத்தில் இருக்கிறவங்க கிட்ட சொல்லி அமைதியா பேச சொல்லு இல்ல சல்லி தனத்தை காமிச்சா அவ்வளவு தான் என்கிறார் ஜீவானந்தம். நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன் என அடிக்கடி சொல்றீயே எத்தனை பேரை ஏமாற்றி, தலைமேல் ஏறி இந்த இடத்துக்கு வந்து அதற்கு பிறகு என்னவெல்லாம் செய்த என்பது எங்களுக்கு தெரிஞ்சதால தான் இங்க வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கம்பெனி வரலாறு கூட எங்களுக்கு தெரியும் என ஜீவானந்தம் கூறுகிறார். பேச்சு முத்தி போக கதிர் எழுந்து ரகளை செய்ய ஆரம்பிக்கிறான். அது கைகலப்பில் போய் முடிகிறது. எவ்வளவு சொல்லியும் நிறுத்தத்தால் துப்பாக்கியை எடுத்து மேலே சுடுகிறார் ஜீவானந்தம். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இங்க பாரு குணசேகரன் பத்து நிமிஷம் உனக்கு டைம் தரேன் வெளியில அமைதியா வந்தனா உனக்கு மிஞ்சின சொத்து விவரம் தெரியும் இல்லை என்றால் எதுவுமே தெரியாமல் செத்து போயிடுவ. வெறி பிடித்த மாதிரி கதிர் எல்லாத்தையும் உடைகிறான். சிலை போல குணசேகரன் நிற்கிறார். 



வீட்டில் ஜனனியின் நிலையை பற்றி புலம்புகிறாள் நந்தினி. ஈஸ்வரி அங்க என்ன நிலை என்று தெரியாமல் அங்க போக முடியாது. அங்க ஏதாவது பிரச்சனை என்றால் சக்தியும், ஜனனியும் போன் பண்ணுவாங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்கிறாள் ஈஸ்வரி. அந்த நேரத்தில் கரிகாலன் வந்து வா நம்ம எதிர்காலத்தை பத்தி பேசலாம் ஆதிரை என அழைக்கிறான். அவனை திட்டிவிட்டு சென்று விடுகிறாள் ஆதிரை. நந்தினி அவனை அழைத்து நடக்கும் பிரச்சனை பற்றி பேசுகிறாள். 



குணசேகரனுடன் அனைவரும் வெளியே வருகிறார்கள். ஜீவானந்தம்  பேசிய வார்த்தைகள் குணசேகரன் காதுகளில் எதிரொலிக்கிறது. என்னோட சொத்துல எனக்கு என்ன பங்கு இருக்கு அவன் சொல்ல போறானாம். இந்த கம்பெனி மட்டும் இல்ல எல்லா சொத்துலையும் அவன் பங்கு கேட்க போகிறான் என புலம்புகிறார். "அப்பத்தாவின் ஷேர் 75 % சொத்தில் பங்கு இருக்கு. இவர் உணர்ச்சிவசப்பட்டு 40% ஷேர் அப்பத்தாவுக்கு கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கார்.  ஐந்து ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின சொத்தில் தான் பங்கு  இல்ல என ஆடிட்டர் சொல்கிறார். 



இது அனைத்துக்கும் ஜனனிக்கு சம்பந்தம் இருக்கு. வீட்டில நடக்குற எல்லா விஷயமும் அவனுக்கு எப்படி தெரியும் என இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் அங்கு ஜீவானந்தம் வருகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.