சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் எதிர் நீச்சல் தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சிறிதும் சுவாரஸ்யத்தில் குறைவில்லாமல் அதிரடி திருப்பங்களுடன் நாளுக்கு நாள் பரபரப்பை எகிற வைத்து வருகிறது. அதற்கு முக்கியமான ஒரு காரணமாக கருதப்படுவது ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து.
உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்ட மாரிமுத்து அன்று முதல் இன்று வரை மனைவி மீது அளவு கடந்த அன்பை வெளிப்படையாகவே வெளிக்காட்டக்கூடியவர். இதை அவரே பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமியை செல்லமாக மலர் என்றே அழைப்பாராம். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பிளாஷ்பேக் புகைப்படம் ஒன்றை காட்டி அந்த போட்டோவுக்கு பின்னணியில் இருக்கும் அழகான காதல் பற்றி பகிர்ந்து இருந்தார். 1994ம் ஆண்டு தன்னுடைய கல்யாண நாள் அன்று மாலை 5 மணிக்கு போடிநாயக்கனூரில் உள்ள அவரின் மாமாவின் வீடு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படம் என இடம் நேரத்தைக் கூட அத்தனை ஞாபகமாக வைத்துள்ளார். "திருமணமான அந்த நாளை மறக்கவே முடியாது. மிகவும் த்ரில்லிங்காக இருந்த நாள். பயம், சந்தோஷம், த்ரில்லிங் என அனைத்தும் கலந்த ஒரு நாள். திருமணமானவர்களுக்கு அந்த உணர்வு பற்றி தெரியும். திருமணம் ஆகாதவர்கள் பிற்காலத்தில் அதை பற்றி தெரிந்து கொள்வார்கள். அப்படி ஒரு நெகிழ்வான நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ. அவளும் நானும் என தனது நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து இருந்தார்.
சமீபத்தில் நடிகர் மாரிமுத்து தனது ரியல் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.