சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனி அப்பத்தாவை பார்க்கக்கூடாது என குணசேகரன் தடுக்கிறார். அவருடன் சேர்ந்து ஞானம் ஜனனியை அங்கிருந்து விரட்டி விட கோபத்தில் வந்து விடுகிறாள் ஜனனி. குணசேகரன்தான் ஜீவானந்தம் மனைவியின் கொலைக்கு காரணமாக இருப்பார் என்பதை யூகித்து விடுகிறாள் ஜனனி.




மறுநாள் காலை அப்பத்தாவை காணவில்லை என வீடு முழுக்க வலை வீசி தேடுகிறார் குணசேகரன். ஆனால் எங்கு தேடியும் அப்பத்தா கிடைக்கவில்லை. கதிரும் அந்த நேரத்தில் வீட்டில் இல்லாததால் அவன்தான் அப்பத்தாவை எங்கோ ஒளித்து வைத்து இருக்கிறான் என சந்தேகப்படுகிறார்கள் அந்த வீட்டு பெண்கள். ஒன்றும் புரியாமல் பதறிப்போய் நிற்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.



அப்பத்தாவை காணவில்லை என்று பார்த்தால் மிகவும் கெத்தாக அவர் நீதிபதி முன்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அருகில் ஜனனியும் இருக்கிறாள். காரில் வந்து இறங்குகிறார் ஜீவானந்தம். "இவர் தான் ஜீவானந்தம்" என பட்டம்மாள், நீதிபதியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். "அடிக்கடி உங்க பெயர் அடிபடுகிறது" என நீதிபதி சொல்ல "அவர் ரொம்ப நல்லவர்" என அப்பத்தா சொல்கிறார்.

வக்கீலுடன் குணசேகரன் வந்து இறங்குகிறார். அப்பத்தாவுடன் ஜீவானந்தம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் குணசேகரன் "என்னையே பழிவாங்குறீயா நீ? நான் அழிஞ்சாலும் அழிவேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்க எல்லாரையும் அழைச்சிட்டு தான் நான் அழிவேன்" என சபதமிடுகிறார். அதை கேட்ட அப்பத்தா "போதும் நிறுத்து குணசேகரா" என்கிறார். ஜீவானந்தமும் குணசேகரனை பார்த்து முறைக்கிறார். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ.



அப்பத்தா தான் ஜனனியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். கொஞ்ச நாள் கோமாவில் இருந்தாலும் தற்போது ஜனனிக்கு சப்போர்ட்டாக மீண்டும் அப்பத்தா வந்து விட்டார். ஜீவானந்தம் முதலில் கெட்டவர் என நினைத்த ஜனனிக்கு இப்போதுதான் உண்மை தெரிந்துள்ளது. மேலும் அவரின் மனைவியை குணசேகரன் தான் கொலை செய்தார் என்ற உண்மை ஜீவானந்தத்திற்கு தெரிய வந்தால் குணசேகரன் நிலை என்ன ஆகும்?




இந்த ட்விஸ்ட் இவ்வளவு விரைவில் நிகழும் என எதிர்பார்க்காத எதிர் நீச்சல் (Ethir neechal) ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. வரும் நாட்களில் எதிர் நீச்சல் சீரியலில் இனி என்னவெல்லாம் நடக்க போகிறது என்பது மிகவும் சஸ்பென்ஸாக இருக்கிறது.