விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் குணச்சித்திர வேடத்தில், நடித்து வருபவர் தான் ஸ்ருதி நாராயணன். கடந்த ஒரு மாதமாகவே இவரை பற்றிய டாப்பிக் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது. இதற்க்கு காரணம் இவருடைய அந்தரங்க வீடியோ சர்ச்சை தான்.
ஸ்ருதி நாராயணன், வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக ஒரு ஆண் நபருடன் 14 நிமிடங்கள் 5 நொடிகள் பேசிய வீடியோ ஒன்று லீக் ஆன நிலையில்... இந்த வீடியோ உண்மையானதா? அல்லது டீப் fake வீடியோவா என்கிற குழப்பம் ஒரு பக்கம் நிலவிய நிலையில், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. பின்னர் இதுகுறித்து விளக்கம் கொடுத்த ஸ்ருதி நாராயணன் இது டீப் பேக் வீடியோ என அறிவித்தார்.
தன்னுடைய உருவத்தை AI மூலம் மாற்றி இப்படி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இவர் போட்டிருந்த பதிவு ஒன்றில், "மிகவம் கடினமான காலகட்டத்தில் உள்ளேன். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. எல்லா விஷயங்களையும் காட்டு தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலி போன்றோரும் பெண்கள்தான். அவர்களுக்கும் என்னை போன்ற உடல் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பாருங்கள்" என என இவர் கூறியதும் வழக்கம் போல் சில சர்ச்சைகளை எதிர்கொண்டது.
இந்த விஷயம் தற்போது ஓரளவு தணிந்துள்ள நிலையில், தற்போது ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக 'கட்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நீல நிற சேலையில் படவிழாவுக்கு வருகை தந்த நடிகை ஸ்ருதி, தனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்தார்.
'கட்ஸ்' படத்தை, இயக்குனர் ரங்கராஜ் இயக்கி - தயாரித்துள்ளார். மேலும் இந்த விழாவில் புரொட்யூஸர் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், கில்டு செயலாளர் துரை, நடிகை ஸ்ரீலேகா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்ளின் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். சிறகடிக்க ஆசை சீரியலில் கதாயாகியாக நடிக்கும், கோமதி ப்ரியாவுக்கே ஹீரோயின் வாய்ப்பு இதுவரை கிடைக்காத நிலையில், ஸ்ருதி நாரயணனுக்கு இந்த பட வாய்ப்பு ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.