பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவுக்கு கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆனதாக தெரிவிக்கப்படும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.


இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.


பழிவாங்கிய ராதிகா 


பாக்யாவுக்கு ஐடி கம்பெனி ஓனரிடம் இருந்து போன் வருகிறது. தன்னை வந்து பார்க்க முடியுமா என கேட்க, எழிலுடன் சேர்ந்து அங்கு செல்கிறார். இன்னும் 2 நாள்ல இந்த இடமே மாறப்போகுது என கேண்டீன் கைக்கு வந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது, ஐடி கம்பெனி ஓனர் உங்களுக்கு இந்த கேண்டீன் ஆர்டர் தர முடியாது என தெரிவிக்கிறார். மேலும் நான் ஓபன் டெண்டர் விடப்போறேன் எனவும் கூற, பாக்யா அதிர்ச்சியடைகிறார். 


நான் இதுக்காக நிறைய செலவுப் பண்ணேன். பாத்திரங்கள் கூட வாங்கிட்டோம் என எல்லாமே சொல்ல, அவரோ சாரி இந்த ஆர்டர் தர முடியாது என தெரிவிக்கிறார். இதனால் என்ன பண்ண என புரியாமல் பாக்யாவும், எழிலும் அங்கிருந்து செல்ல நினைக்கும் நிலையில் ராதிகா வந்து தான் எடுத்த முடிவால் தான் கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆனதாக சொல்கிறார். மேலும் ஏரியா செகரட்டரி தேர்தல்ல ஜெயிச்சதும் என்ன பேச்சு பேசுனீங்க..இப்ப என்ன நஷ்டம் ஆயிடுச்சா பாக்கியலட்சுமி என நக்கலாக கேட்கிறார். 


வாழ்க்கை நஷ்டப்பட்டபோவே நான் கவலைப்படல. இதெல்லாம் என்ன பெரிய விஷயம் என பாக்யா பதிலடி கொடுக்கிறார். கூட இருக்குறவங்க எல்லாம் துரோகியா மாறிட்டாங்க என சொல்ல ராதிகா,என்ன நடந்தாலும் திமிர் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என கூறுகிறார். மேலும் இங்க தானே உன் அதிகாரம் எல்லாம் செல்லும். ஏரியாவுக்கு வந்து தானே ஆகணும் என பாக்யா மிரட்டலாக கூறுகிறார்.  தப்பையும் பண்ணிட்டு அதை கெத்தா சொல்லி வேற காட்டுறீங்களா என சொல்லும் எழில் பாக்யாவை அங்கிருந்து அழைத்து செல்கிறார். 


வர்ஷினி எடுத்த முடிவு 


ஈஸ்வரியும், செல்வியும் வீட்டில் இருக்கும் நிலையில் அங்கு தயாரிப்பாளர் மகள் வர்ஷினி வருகிறார். அவர் நேரடியாக ஈஸ்வரியிடம் எழிலை கல்யாணம் பண்ணிக்க ஆசையா இருக்கு என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். மேலும் அம்ரிதா - எழில் விவகாரத்தையும் போட்டுக் கொடுக்கிறார். அப்போது வீட்டுக்கு வரும் பாக்யா, கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆன விஷயத்தை சொல்ல, ஈஸ்வரி, செழியன் இருவரும் அவரை திட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.