Baakiyalakshmi serial August 10 : பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 10) எபிசோடில் ஜெனி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். செழியன் கிட் வாங்கி வந்ததும் ஈஸ்வரி அதை ஜெனியிடம் கொடுத்து செக் பண்ண சொல்கிறார். ஜெனியும் செக் பண்ணி பார்த்துவிட்டு கன்பார்ம் பண்ண அனைவருக்கும் டபுள் சந்தோஷமாக இருக்கிறது. 


 




இனியா, எழில், தாத்தா என அனைவரும் செழியனை கிண்டல் செய்கிறார்கள். "எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தீங்க. அப்புறம் எப்படி இந்த பாப்பா வந்தது" என எழில் செழியனை வம்பு பண்ண செழியன் வெட்கப்பட்டு ஓடிவிடுகிறான்.


ஜெனியின் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜெனி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததில் இருந்து கையும் காலும் ஓடவே இல்லை. உடனே இங்க ஓடி வந்துட்டோம் என்கிறார்கள். அப்படியே சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கும் போது "ஜெனி டெலிவரியை நாங்க இங்கேயே பாத்துக்குறோம்" என  ஈஸ்வரி சொல்ல ஜெனியின் அப்பா அம்மா "எங்களுக்கும் ஆசையா இருக்கும் இல்லையா. அம்மா வீட்ல பாக்குறது தானே முறை" என்கிறார்கள்."முதல் குழந்தைக்கு தான் அந்த முறை எல்லாம். இரண்டாவது டெலிவரி நாங்க பாத்துப்போம். உங்களுக்கு வேணுமா நீங்க இங்க வந்து இருங்க " என்கிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தியும் பாக்கியாவும் "அது நடக்கும் போது பாத்துக்கலாம். ஜெனிக்கு எங்க விருப்பமோ அங்க இருக்கட்டும் " என பேச்சை முடித்து வைக்கிறார்கள். ஜெனியின் அப்பாவும் அம்மாவும் கிளம்பி விடுகிறார்கள்.


 



 


ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் பாக்கியா சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே அமிர்தா வந்து "நிலா ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவ தான் பாப்பாவ பார்த்துப்பாளம். பயங்கரமா வாயாடுறா" என சந்தோஷமாக சொல்கிறாள். ஆனால் ஈஸ்வரி அமிர்தாவை பார்த்து முறைத்து கொண்டே இருக்கிறார். "ஜெனி புத்திசாலித்தனமா பொண்ணு. எந்தெந்த வயசுல என்ன பண்ணணுமோ அதை சரியா பண்ணிட்டா. சில பேருக்கு தான் அது புரியவே மாட்டேங்குது" என அமிர்தாவை சுட்டிக்காட்டி பேசுகிறார். அதை கவனித்த பாக்கியா அமிர்தாவை வெளியில் போய் வேறு வேலை பார்க்க சொல்லி அனுப்புகிறாள். 


"என்ன பாக்கியா நான் உன்னோட மருமகளை ஏதாவது சொல்லிட போறேன் என அவளை அனுப்பி விடுறியா" என கேட்கிறார் ஈஸ்வரி. "அப்படி எல்லாம் இல்ல அத்தை. நிஜமாவே வெளியில் வேலை இருக்கு" என்கிறாள் பாக்கியா. "ஏய் நில்லு. வெளிப்படியாவே கேக்குறேன். நீ தான் நமக்கு குழந்தை வேண்டாம், நிலா மட்டும் போடும் அப்படினு சொல்லி வைச்சு இருக்கியா. ஏற்கனவே புருஷன் செத்துப் போயிட்டான்னு சொல்லி எழிலை கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஒரு நாள் அவன் உயிரோடு வந்து நின்னான். என்னோட வந்துரு என உரிமையா கூப்பிட்டான். அது மாதிரி திரும்பவும் நடக்காது என என்ன நிச்சயம்" என கேட்க அமிர்தா அதிர்ச்சி அடைகிறாள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.