பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் தருவதாக சொன்ன பணத்தில் ஒரு பகுதியை பாக்கியா அனுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள்.  இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


கோபியை அலறவிட்ட உப்புமா 


பாக்கியா வீட்டில் இனியா ஸ்கூலுக்கு கிளம்ப, வேனுக்கு பீஸ் கட்டியாச்சி அதனாலே அதுல போகட்டும் என ஈஸ்வரியிடம் பாக்யா சொல்கிறார். அந்த வீட்டில் மயூ ஸ்கூலுக்கு கிளம்ப ராதிகா அவளுக்கு மதிய சாப்பாடு தயார் பண்ணி கொடுக்கிறார். ஆனால் தனக்கு லன்ச் வராததால் கோபி எனக்கு எங்கே என கேட்கிறார். அதற்கு நீங்க தான் வீட்டுல சாப்பிட மாட்டேன்னு சொன்னீங்களே. வேணும்னா அந்த உப்புமாவை பேக் பண்ணி தரட்டா என கேட்க, விட்டால் போதும் என மயூவை கூட்டிக் கொண்டு கோபி புறப்படுகிறார். 


வெளியே இனியாவை ஸ்கூலுக்கு அனுப்ப பாக்யா, ஜெனி இருவரும் வெளியே வருகின்றனர். மயூவுடன் கோபியை பார்க்கும் இனியா கடுப்பாகிறார். ஆனாலும் பாக்யா சொன்னபடி எதைப்பற்றியும் கண்டுக்கொள்ளாமல் இனியா வேன் வரும் இடத்திற்கு புறப்பட்டு செல்கிறார். வழியில் கோபி காரை நிறுத்தி இனியாவை ஸ்கூலில் கொண்டு போய் விடுவதாக தெரிவிக்க அவளோ கோபத்தில் எதுவும் பேசாமல் செல்கிறாள். 


திருப்பி கொடுக்க தயாரான பாக்கியா 


பின்னர் கோபி தனது நண்பரை சந்திக்கிறார். அவரிடம் ராதிகாவுடனான் நடந்த கல்யாணம் குறித்தும், இனிமேல் தன் வாழ்க்கையில் நடக்கப்போகும் சந்தோஷ தருணங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி போனுக்கு பணம் பேங்க் அக்கவுண்டில் கிரெடிட் ஆனதாக மெசெஜ் வருகிறது. இங்கு பாக்யாவுக்கு கல்யாணத்தில் சமைத்ததால் கிடைத்த பணம் பேங்க் அக்கவுண்ட்டிற்கு வருகிறது. அதை ஜெனி தெரிவிக்க பாக்யா போன் மூலமாக கோபிக்கு ரூ.40000 அனுப்புகிறார். 


பணம் யார் அனுப்பியது என கோபி குழம்பி கொண்டிருக்க, பாக்யா போன் செய்து கொடுக்கிறேன் சொன்ன ரூ.40 லட்சத்துல முதல் தவணை ரூ.40 ஆயிரம் அனுப்பியிருக்கேன் என சொல்லிவிட்டு கோபியின் பதிலை கூட கேட்காமல் போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே செல்லும் கோபி என்ன நடந்தது என கேட்கும் தன் நண்பரிடம் உண்மையை சொல்ல முடியாமல் சமாளிக்கிறார்.  


ராதிகா சொன்ன முடிவு 


இறுதியாக வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கோபி தலைவலிப்பதாக கூறி ராதிகாவிடம் காஃபி கேட்கிறார். அதை அவர் கண்டுகொள்ளாமல் கோபிக்கு ஹெட் மசாஜ் செய்து விடுகிறார். இதனால் நொந்து போகும் கோபி இந்த வீட்டில் காஃபி கூட கிடைக்காது போலயே என புலம்பி தள்ளுகிறார். அப்போது ராதிகாவிடம் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் பாஸ்போர்ட் ஆபிசிலிருந்து வரும் போஸ்ட் ஒன்றுக்காக தபால் காரரை எதிர்பார்த்து கார்த்திருப்பதாக கூறுகிறார். அவர் வர்ற நேரம் தான் அதுக்காக தான் காத்துகிட்டு இருக்கேன் எனவும் கோபி தெரிவிக்கிறார். அதற்கு ராதிகா நீங்க பேசாம அட்ரஸை மாத்திங்க என ஐடியா கொடுக்கிறார். 


ஆனால் தபால்காரர் நேராக பாக்கியா வீட்டுக்கு சென்று கோபி பற்றி விசாரிக்கிறார். அப்படி எல்லாம் இரு ஆள் இங்கு இல்லை என ராமமூர்த்தி அவரை திட்டி அனுப்புகிறார். இனிமேல் அந்த பெயருக்கு போஸ்ட் வந்தால் கொண்டு வராதீங்க எனவும் தெரிவிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.