விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் வரும் வார ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதிலும், பாக்கியலட்சுமி சீரியல் என்றால் சொல்லவா வேண்டும். இல்லத்தரசிகளின் கதை என்பதைப் போல பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களின் ஃபேவரைட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித், ராஜலட்சுமி, ரோசரி, திவ்யா கணேஷ், ரித்திகா, நேகா மேனன், விஜே விஷால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 


இந்த சீரியலில் தற்போது கதை வேறு வகையில் பயணப்பட்டு கொண்டிருக்கிறது. கோபிக்கு ஒரே மாதத்தில் ரூ.18 லட்சம் கொடுப்பதாக பாக்யா சவால் விட்டதில் இன்னமும் இரண்டு நாட்கள் தான் மிச்சம் இருக்கிறது. இதனிடையே பாண்டிச்சேரியில் நடந்த கல்யாணத்தில் சமைத்ததில் ஒரு பணம் கிடைக்கிறது. 


ஆனால் எட்டு லட்சம் தான் இருக்கிறது. மீதி பத்து லட்சத்திற்கு எண்ண பண்ண போகிறோம் என பாக்யா குழம்பி போகிறாள்.  அந்நேரம் அங்கு வரும் கோபி, பாக்யாவிடம், ‘பணமெல்லாம் ரெடி ஆகிட்டா?’ என கேட்டு வம்பிழுக்கிறார். இதைக்கேட்டு டென்ஷனாகும் ராமமூர்த்தி, ‘ரெண்டு நாள்ல என் மருமகள் உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க தான் போற. உன் மூஞ்சியில தூக்கி பணத்தை எறிவா. பொட்டியை கட்டுற வழியை பாரு’ என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றது. 


இதனிடையே இந்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “பணம் பற்றி கோபி கேட்டு, வாசலை கேட்டு வெளியே போற வழி அங்க இருக்கு” என சொல்கிறார். ஆனால், வீட்டுக்குள் செல்லும் பாக்யா, பூஜையறையில் இருக்கும் 18 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து கோபி- ராதிகாவுக்கு அதிர்ச்சியளிக்கிறார். பின்னர் ராதிகாவிடம், ‘வாழ்க்கையில் எல்லாத்தையும் விடவும் சுயமரியாதை முக்கியம்ன்னு நினைக்கிறவ நான்.. அதனாலே கொடுத்த பணத்தை வாங்கிட்டு வீட்டை விட்டு வெளியே போங்க’ என கூறுகிறாள். 


இதற்கு கோபி பதில் சொல்ல முயல, ராதிகா அவரை தடுத்து, ‘இங்க இதுக்குமேல  இருந்தா நிம்மதி இருக்காது’ என சொல்ல, இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பின்னர் பாக்யா எழிலிடம், ‘மூடுறா கேட்டை’ என சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.