தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அயலி மற்றும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் ஆகிய சீரியல்கள் மகா சங்கமமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

Continues below advertisement

நேற்றைய எபிசோடில் வர்மா வயதானவர் போன்ற தோன்றத்தில் மண்டபத்திற்குள் நுழைந்த நிலையில், இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கடத்தப்பட்ட கவர்னர்:

அதாவது, வர்மா கவர்னரின் பக்கத்தில் உட்கார அவரை எழுப்ப முயல கவர்னர் வயதானவர் தானே பரவாயில்ல விடுங்க என்று சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் புத்தகத்தில் இருந்து துப்பாக்கியை எடுக்கும் வர்மா கவர்னரை துப்பாக்கி முனையில் கடத்தி செல்கிறான். 

Continues below advertisement

எனக்கு அந்த AD-ஐ பார்க்கணும் என்று டிமாண்ட் செய்ய, கவர்னரை காப்பாற்ற அயலி வேறு வழியின்றி வர்மாவை சந்திக்க கிளம்புகிறாள். அப்போது இசை அங்கு AD தோற்றத்தில் வந்து நிற்கிறாள், வர்மா இவளா  AD என கேட்டு இசையிடம் பேசுகிறாள். 

காப்பாற்றப்போவது யார்?

கவர்னரும் வந்திருப்பது AD அயலி இல்லை, இசை என்பதை புரிந்து கொள்கிறார். இப்படியான நிலையில் அடுத்து  நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அயலி மற்றும் பாரிஜாதம் மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.