தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி ஹாஸ்பிடலுக்கு சூடாமணி பெயரை வைக்க, ஷண்முகம் சௌந்தரபாண்டியை வைத்து திறக்க, அதனைத் தொடர்ந்து அவர் “ஷண்முகத்தை தர்மகத்தாவாக விட மாட்டேன்” என்று சபதம் எடுத்த நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, சிவபாலன் சௌந்தரபாண்டியால் பூட்டப்பட்ட ரூமுக்குள் செல்ல முயற்சி செய்ய, சௌந்தரபாண்டி அதனைத் தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்புகிறார். ஒரு நாள் கண்டிப்பா அந்த ரூமுக்குள் சென்று என்ன இருக்குனு தெரிந்து கொள்வேன்” என்று பாக்கியத்திடம் சொல்கிறான். 


இன்னொருபக்கம் சௌந்தரபாண்டிக்கு ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற எண்ணம் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க, முத்துப்பாண்டியிடம் வந்து “அந்த ஷண்முகம் தர்மக்கத்தா தேர்தலில் நிற்க கூடாது, அவன் மட்டும் அப்படி நின்னு ஜெயிச்சிட்டா கழுத்தை அறுத்துட்டு செத்து போய்டுவேன்” என்று மிரட்டுகிறார். 


பிறகு விடியற்காலையில் இருந்து இரவு வரும் பரணி சிகிச்சை பார்த்துக் கொண்டிருக்க, “ஷண்முகம் போதும் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று வீட்டிற்கு அழைக்க, பரணி “உன்னால காத்திருக்க முடியாதுனா நீ கிளம்பு” என்று திட்ட, ஷண்முகம் காத்திருந்து அவளை அழைத்து வருகிறான். அப்போது எதிரே வரும் முத்துப்பாண்டி ஷண்முகத்திடம் “நீ தர்மகத்தா தேர்தலில் நிற்கக் கூடாது” என்று மிரட்ட, “சண்முகமும் நான் நிற்க மாட்டேன்” என்று சொல்கிறான். 


ஆனாலும் முத்துப்பாண்டி “ஒருவேளை நீ நின்றால் உன்னை கொன்னுடுவேன்” என்று மிரட்ட, பரணி “என் புருஷன் நின்னு ஜெயிப்பான், உன்னால் முடிந்ததை பார்த்துக்க” என்று சொல்லி அனுப்ப, அந்த விஷயம் சௌந்தரபாண்டிக்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைகிறார். பிறகு பரணி வீட்டிற்கு வர வைகுண்டம் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். 


பரணிக்காக ஷண்முகம் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்திருக்க பரணி அதில் உட்கார்ந்து சாப்பிட மறுக்கிறாள். “இன்னும் 50 நாள் தான் இருக்க போறேன், அப்படியிருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு எல்லாம்?” என்று சொல்ல, வைகுண்டம் சண்முகத்தை தனியாக அழைத்துச் சென்று “அந்த மனசு இடத்தை பிடிக்க பாரு, ஏதாவது பண்ணு” என்று அறிவுரை கூறுகிறார். 


அதுமட்டுமின்றி மந்திரவாதி ஒருவரை சந்தித்து “மகனும் மருமகளும் ஒன்னு சேரனும்” என்று சொல்லி கேட்க, அவர் ஒரு தாயத்தை கொடுத்து “இன்னும் 4 நாளில் இதை அவங்க கையில் கட்டிட்டா அவங்க சேர்ந்துடுவாங்க” என்று சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.