ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் பரணி, பாக்கியம் மறுபக்கம் ஏகேஎஸ் குடும்பம் கோயிலில் இருந்து கிளம்ப, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வார்களா என்ற பில்டப்புடன் எபிசோட் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி வீட்டுக்கு கிளம்ப, இன்னொரு பக்கம் பரணி மற்றும் பாக்கியம் இருவரும் கிளம்பி வரும்போது ரத்னா மற்றும் வெங்கடேஷ் இருவரும் எதிரில் வருகின்றனர். ரத்னாவிடம் கல்யாணம் பேசி முடிச்சாச்சு என்று சொல்ல சந்தோஷப்படுகிறாள்.


பிறகு பரணி “எங்க கூடலாம் சாமி கும்பிட வர மாட்டீங்களா?” என்று சொல்லி இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் செல்ல, பாக்கியம் பரணிக்கு கல்யாணம் வைத்திருப்பதால் துலாபாரம் பற்றி கேட்டு வருகிறேன் என்று ஐயர் ஒருவரிடம் சென்று இது பற்றி கேட்கிறார். அவர் “எடைக்கு எடை தங்கம் வைக்கணும், அப்படி இல்லை என்றால் புடிச்ச பொருள் வைக்க வேண்டும், அதுதான் துலாபாரம்” என்று சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்டு சிவபாலன் “உன் பொண்ணு 56 கிலோ எடை. அவ்வளவு தங்கம் எப்படி வைக்க முடியுமா?” என்று கேட்க “என் பொண்ணே ஒரு தங்கம் தான்” என்று பாக்கியம் டயலாக் பேசுகிறார். 
 
அதனைத் தொடர்ந்து இவர்கள் அந்த வழியாக சௌந்தரபாண்டி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். “போச்சு மாட்டிக்கிட்டோம்” என்று அலற, பரணி “நீ சாமி வந்தா மாதிரி ஆடு” என்று சொல்ல, “எனக்கு அதெல்லாம் ஆட வராது என்று பாக்கியம் சொல்ல” பரணி இடுப்பை பிடித்து கிள்ளிவிட சாமி வந்தது போல் ஆடுகிறாள் பாக்கியம். 


சௌந்தரபாண்டி இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஏதோ குடும்ப பிரச்சினை போல என்று நகர்ந்து செல்ல, முத்துப்பாண்டி அது நம்ப அம்மா அப்பா என்று சொன்ன பிறகு சௌந்தரபாண்டி அங்கு வந்து “இங்கு என்னடி பண்ற?” என்று கோபப்பட, “டேய் நான் ஆத்தா வந்து இருக்கேன், என்னையே மரியாதை இல்லாம பேசுறியா?” என பாக்கியம் சௌந்தரபாண்டியை பிடித்து திட்டுகிறாள்.


சனியன் “மாரியம்மா சாபமிட்டால் அப்படியே பலிக்கும்” என்று அங்கிருந்து நழுவி செல்ல, சௌந்தர பாண்டி ஆவேசப்பட ஊர் மக்கள் “சாமி வந்து இருக்கு அப்படியெல்லாம் சொல்லாதீங்க, சாபமிட்டா அவ்வளவு தான்” என்று சொல்ல, “நீ வீட்டுக்கு வா கவனிச்சிக்கிறேன்” என எச்சரித்து விட்டு நகர்கிறார் சௌந்தரபாண்டி. 


வீட்டில் சௌந்தரபாண்டி கோபமாக இருக்க பரணி பயந்து கொண்டு வீட்டுக்கு வர தடுத்து நிறுத்தி, கோயிலில் நடந்த விஷயம் குறித்து கேள்வி கேட்க, “எனக்கு எதுவும் தெரியாது, அது சாமி வந்து சொன்னது” என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்கின்றனர். 


முத்துப்பாண்டி, அம்மா உன்னை என்னவெல்லாம் சொல்லி திட்டுச்சு என்று எல்லாத்தையும் திருப்பி சொல்ல சிவபாலன் அதை எல்லாம் அப்படியே காமெடி ஆக்கிவிட, சௌந்தரபாண்டி “அவ ஒருமுறைதான் சொன்னா, இங்க ஏன்டா திரும்பத் திரும்ப சொல்லி என்னை கடுப்பேத்துறீங்க” என்று கோபப்படுகிறார். 


அடுத்ததாக சண்முகம் வீட்டில் இரவில் வைகுண்டம் தூங்கிக் கொண்டிருக்க கனவில் வரும் அவரது மனைவி சூடாமணி அவரை அழைப்பது போல தோன்றுகிறது.  இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.