தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி கனியை சந்தித்துப் பேச, ரத்னா அவளைத் திட்டி அனுப்ப, சௌந்தரபாண்டி அவர்களுடன் இருப்பதைப் பார்த்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது விஷயம் அறிந்த ஷண்முகம் ஆவேசமாக ஸ்கூலுக்கு கிளம்பி வர, கனி பயந்து கிடக்க அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வைகுண்டம் விபூதி வைத்து விட்டு ஒன்னும் ஆகாது என்று ஆறுதல் சொல்கிறார். இதனையடுத்து ரத்னா பரணியை கூப்பிட்டு இதுக்கெல்லாம் காரணம் உங்க அப்பா சௌந்தரபாண்டி தான் என்ற உண்மையை உடைக்கிறாள். 


ஆமாம், “முத்துப்பாண்டி சௌந்தரபாண்டினு ரெண்டு பேருமே அவங்க கூட இருந்தாங்க. எல்லாரும் ஒரே காரில் தான் கிளம்பி போனாங்க” என்று சொல்ல இதை ஷண்முகம் கேட்டு விடுகிறான். இதனால் அவன் பயங்கர கோபத்துடன் கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வர, பரணியும் உடன் வருகிறாள். 


ஷண்முகம் வருவதைப் பார்த்து சௌந்தரபாண்டி ஓடி ஒளிய முயற்சி செய்ய, பாண்டியம்மா குறுக்கே வந்து சண்முகத்தை எதிர்க்க “பொம்பளையா இருக்கியேனு, உன் மேல கை வைக்காமல் இருக்கேன்” என்று சொல்ல அவள் “நான் பொம்பளைக்கு பொம்பள, ஆம்பளைக்கு ஆம்பள” என்ற டைலாக் பேச, பரணி பளாரென ஒரு அறையை விட்டு “நீ வெட்டுடா, எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்” என்று சொன்னதும் சௌந்தரபாண்டி ரூமுக்குள் ஓடி ஒளிகிறார். 


ஷண்முகம் கதவை எட்டி எட்டி உதைக்க, சௌந்தரபாண்டி உள்ளேயே இருக்க, மண்ணெண்ணையை ஊற்றி பத்த வைக்கப் போவதாக மரண பயத்தை காட்டுகிறான். இதனால் சௌந்தரபாண்டி “பாக்கியம் என்ன காப்பாத்து டி உன் தாலிக்கே ஆபத்து” என்று சொல்லி சத்தம் போட, பாக்கியம் “நீ கொளுத்து டா, நான் பார்த்துக்கறேன்” என்று ஷாக் கொடுக்கிறாள். 


இதனையடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டிக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல அவன் பதறியடித்து ஓடி வருகிறான். “வீட்டையே கொளுத்துறேன்” என்று ஷண்முகம் சொல்ல, சௌந்தரபாண்டி பயத்தில் வெளியே ஓடி வர கழுத்தில் அரிவாளை வைத்து மடக்கி பிடிக்கிறான் ஷண்முகம். இதே நேரத்தில் வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் கத்தியை வைத்து ஷண்முகத்தை மிரட்டுகிறான். 


எதிர்பாராத ட்விஸ்ட்டாக இசக்கி “என்னை பதில் கவலைப்படாதே அண்ணே, அவனை வெட்டு” என்று முத்துபாண்டியை கையை இழுத்து தனது கழுத்தை இறுக்க முத்துப்பாண்டி அதிர்ச்சி ஆகிறான். இப்படியான இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.