அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதா குடிக்க போகும் தண்ணீரில் மயக்க மருந்து கலக்கப்படும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல்


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். 


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 


முன்னதாக செந்தில் காலேஜில் படிக்க வைக்க தேவையான பணத்தைப் பெற  சைக்கிள் போட்டியில் அமுதா கலந்து கொள்கிறார். போட்டியில் கலந்து கொண்ட மற்ற ஆண்கள் ஒவ்வொருவராக போட்டியில் தோற்க அமுதாவும் மாரிமுத்துவும் கடைசியில் களத்தில் இருக்கும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது. 






இன்றைய எபிசோடில் உமா-பழனி இருவரும் திட்டமிட்டு அமுதா குடிக்க போகும் தண்ணீரில் மயக்க மருந்து கலக்கின்றனர். அதனை அமுதா தண்ணீரை குடித்தவுடன் தடுமாற, அன்னலட்சுமி மருமகளே விட்டுறாத  என அவரை ஊக்கப்படுத்துகிறாள்.அதேசமயம்  சிதம்பரம், நாகு இருவரும் அமுதா தோற்றுப் போய் குடும்ப மானத்தை வாங்கப் போகிறாய் என சொல்கின்றனர்.  இதில் நாகு ஒரு பெண்ணுக்கு இது தேவையா என நக்கலாக கூற,  அதை கேட்ட அன்னலட்சுமி, அமுதா வைராக்கியமானவள். அதனால விட்டுக் குடுக்க மாட்டா என பதிலளிக்கிறார். 


இறுதியாக மாரிமுத்து அமுதாவிற்கான போட்டி நடக்க அனைவரும் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என டென்ஷனாக இருக்கின்றனர். ஆனால் மாரிமுத்து தோற்க,  அமுதா வெற்றி பெற்ற நிலையில் மயங்கி கீழே சாய்கிறார். அவரை செந்தில் தூக்கி கொண்டு செல்கிறார். பின்னர்  தண்ணீர் குடுத்து கை, கால்களை தேய்த்து விட்டும் அமுதா கண் விழிக்காமல் இருக்கிறாள்.


அப்போது மயக்கத்தில் இருக்கும் அமுதாவை பார்த்த சிதம்பரம், அன்னலட்சுமியிடம் என் பொண்ணுக்கு அப்படி என்ன மந்திரம் போட்டீங்க என கேட்கிறார். அதற்கு  அன்னம் உங்களுக்கு வேணா அவ மகளா இருக்கலாம் எங்களுக்கு அவ குலசாமி என பதிலடி கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.