ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நடிகை ரியா விஸ்வநாத் விலகியுள்ள நிலையில், அந்த கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடிகை ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்திருந்தார்.2வது பாகத்திலும் தொடக்கத்தில் ஆல்யாவே ஹீரோயினாக தொடர்ந்தார். ஆனால் 2வது கர்ப்பமானதால் ராஜா ராணி 2 வில் இருந்து விலகிய ஆல்யா, தனக்கு பதிலாக ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் தொடர்வார் என தெரிவித்து வீடியோ வெளியிட்டு, ரியாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். 


கதைப்படி சந்தியா தான் ஆசைப்பட்ட மாதிரியே சொந்த ஊரிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக மாறி இருக்கிறார். வருஷம் 365 நாளும் பிரச்சினை என்ற ரீதியில் நாளும் புது புது பிரச்சினை சந்தியாவுக்கு வருகிறது. தீவிரவாதிகள் தொடங்கி எல்லா வித சவால்களையும் அவர் சமாளிக்கிறார். எப்படா இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு சந்தியாவை சுற்றி நடந்த பிரச்சினைகள் ஏராளம். 






இந்த நிலையில் தான் நேற்றைய தினம் ரியா விஸ்வநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் ராஜா ராணி சீரியலில் நடிக்க வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரைக்கும் நான் ஒரு வீடியோ கூட பதிவிட்டதில்லை. இப்போ வெளியிடுறதுக்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இல்லை. அந்த கேரக்டரில் வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இதை நான் மக்கள்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். இந்த ஒரு வருஷத்தில் பாக்குறவங்க எல்லாரும் சந்தியா சந்தியா என்று பேசும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கும். இனி சந்தியாவா நடிக்கப் போறவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று உருக்கமாக பேசியிருந்தார். 


இந்நிலையில் ரியா நடித்து வந்த சந்தியா கேரக்டரில் இனிமேல் ஜீ தமிழ் சேனலில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஷா கவுடா கண்டிப்பாக போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். அடுத்த சில தினங்களில் புது சந்தியா அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.