Sivakarthikeyan :சூப்பர் சிங்கர் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் !!

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10  கோலாகலமாகத் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னைச் சந்திக்க ஆசைப்பட்டதாகக் கூறிய பாடகியை,  நேரில் வரவைத்துச் சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Continues below advertisement

தமிழ் இசை உலகில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து வரும் சூப்பர் சிங்கர்  சீனியர் நிகழ்ச்சியின் 10 வது சீசன் ஒவ்வொரு வாரமும் பெரும் கொண்டாட்டத்துடனும், பல நெகிழ்வான தருணங்களுடனும் அரங்கேறி வருகிறது. 

Continues below advertisement

பல திறமையாளர்களுக்கான அடையாளமாகத்  திகழும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது. பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் ஆரம்ப கட்ட எபிஸோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி,  சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தற்போது இவர் தமிழில் எம் ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும்  அனைவரது பாராட்டையும் பெற்றது.  

இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார். இதன் வீடியோ பதிவு, இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கான புரமோ வீடியோவில்,  சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தருணத்தை நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக் கொண்டார். அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிய காட்சிகள் அனைவரையும் உருக வைத்தது. 

நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இந்த வாரம் முழுதும் “தல தளபதி” சிறப்புச் சுற்று நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் “தல தளபதி” பாடல்களைத் தேர்தெடுத்து பாடவுள்ளனர். ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க பெரு விருந்தாக இந்த வாரம் பல  ஆச்சரியமிக்க விருந்துகள் காத்திருக்கிறது. 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி,  தமிழ் இசை உலகில் இந்நிகழ்ச்சி  மிகப்பெரும்  மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.   எளிய பின்னணியிலிருந்து,  இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள்,  சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும்  பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் பலர் ஜொலித்து வருகின்றனர்.

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடையான இந்நிகழ்ச்சி, பாடகர்களின் ஆசைகளை நிறைவேற்றித் தரும் மேடையாகவும் மாறியுள்ளது. இந்நிகழ்ச்சி  அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. 

தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசனில்  பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.  

பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து  வரும்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10 வது சீசனிலும் களைகட்டி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola