சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். ஒரு பெண்ணின் குணத்தை அவர் அணியும் உடையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதைக் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டும் என சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத் இந்த பேட்டியில் பேசியுள்ளார்

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணமா சீரியலில் வில்லியாக நடித்து பரவலாக கவனமீர்த்தவர் நடிகை ஃபரினா ஆஸாத். பாரதி கண்ணமா 2 ஆம் பாகத்திலும் இவர் நடித்தாலும் இந்த தொடர் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இறுதிச் சுற்று வரை சென்றார். இது தவிர்த்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு அழைப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி தனக்கான ரசிகர் வட்டாரத்தை மெயிண்டெயின் செய்து வருகிறார். 

Continues below advertisement

பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி ஃபரினா ஆஸாத்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஃபரினா பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் " கவர்ச்சி என்பது நமது ஆடையில் இல்லை எதிரில் பார்ப்பவர்கள் கண்களில் தான் இருக்கிறது. நாம் எல்லாரும் ஆடையில்லாமல் தான் பிறந்தோம். என்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளில் என் குழந்தைகள் முன்னால் நான் இப்படி ஆடை அணிவதை விமர்சித்து கமெண்ட் செய்கிறார்கள். மாற்றம் என்பது நம் வீட்டில் இருந்து தான் தொடங்கும். என் மகன் முன்னிலையில் நான் ஷார்ட்ஸ்  அல்லது சிறிய ஆடைகளை அணிவேன். அவன் அதை இயல்பான ஒன்றாக பார்த்து வளர்ந்தால், வெளியே அதே மாதிரி உடை அணிந்துள்ள பெண்களை பார்த்தாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக்கொள்வான்” என தெரிவித்துள்ளார்  மேலும், “ஒரு பெண்ணின் குணத்தை அவர் அணியும் உடையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதைக் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்  “ஆண் குழந்தைகளை சரியான மதிப்புகள் மற்றும் புரிதல்களுடன் வளர்த்தால், பெண்களை பற்றிய தவறான எண்ணங்கள் அல்லது முன்முடிவுகள் உருவாகும் வாய்ப்பு குறையும்” என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்  பெற்றோர் வளர்ப்பு மற்றும் பாலின சமத்துவம் குறித்த அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.