மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் தொடரும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


மக்களவை தேர்தல் 2024


இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள 1168 திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் இந்திய திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக  மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட மாலை மற்றும் இரவு  நேரக் காட்சிகள் வழக்கமாக தொடரும் என்று திரையரங்க உரிமையளர் சங்கம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது


தேர்தல் முடிய காத்திருக்கும் படங்கள்


தேர்தல் காரணத்தினால் பல்வேறு முக்கியமான படங்களில் ரிலீஸ் நிலுவையில் இருந்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்  நடித்துள்ள இந்தியன் 2 , பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள தங்கலான் உள்ளிட்டப் படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தன. மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் அறிவிக்கப் பட்டதைத் தொடருந்து இந்தப் படங்களில் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டது. 


கமலின் இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தங்கலான் படத்தின் ரிலீஸ் இதுவரை அறிவிக்கப் படவில்லை. ஏப்ரல் 19 தேர்தல் முடிந்தபின் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.