Just In





இன்ஸ்டாகிராமிலும் சம்பாதிக்கலாம்... அசத்தும் தொலைக்காட்சி நடிகைகள்!
பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் ஆதரவு காரணமாக, சமூக வலைத்தளப் பதிவுகளின் மூலமாக அதிக பணம் ஈட்டி வருகின்றனர்.

சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மேலும் சினிமாவில் பெறும் அளவுக்கான சம்பளத்தை விளம்பரங்களிலும் பெறுகின்றனர் நடிகர்கள். இதனை சினிமா நடிகர்களும், தொலைக்காட்சி நடிகர்களும் ஆர்வமாக செய்வது வழக்கம்.
இந்தியாவில் பல மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், சமீப காலங்களில் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் வெளிநாட்டு மதுபான விளம்பரங்களில் நடிக்கத் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எதிர்கொண்டாலும், விளம்பரங்களை விரும்பி ஏற்கும் ஒரு தரப்பும் இருந்து வருகிறது. மேலும், தயாரிப்புகள் தரமற்றவையாக இருந்தாலும், விளம்பரங்களில் நடித்த நடிகர்களைச் சுற்றி சர்ச்சைகள் தோன்றுவதும் இயல்பாக மாறியுள்ளன.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் எட்டியிருக்கும் வளர்ச்சி அதீதமானது என்பதால், சினிமா நட்சத்திரங்களின் பக்கங்களில் அதிகளவிலான ரசிகர்கள் சப்ஸ்க்ரைப் செய்து பின்தொடர்ந்து வருகின்றனர்.
சுஜிதா தனுஷ்
தான் பிறந்த சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமானவர் சுஜிதா தனுஷ். நடிகர் அஜித்துடன் `வாலி’ முதலான படங்களில் நடித்திருந்தாலும், அவரை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர். தனம் என்ற கதாபாத்திரத்தில் இந்தத் தொடரில் நடித்து வரும் சுஜிதாவுக்கு ரசிகர்கள் அதிகம். சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா தனுஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9.75 லட்சம் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். அவர் பதிவிடும் படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் சமூக விழிப்புணர்வு குறித்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
ரோஷ்னி ஹரிப்பிரியன்
விஜய் டிவியின் `பாரதி கண்ணம்மா’ தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரோஷ்னி, சமீபத்தில் அந்தத் தொடரில் இருந்து விலகினார். எனினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஷ்னி, `குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், 9.69 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ள இவர், அழகு சாதனங்கள், ஆடைகள் முதலானவை தொடர்பான விளம்பரங்களைப் பதிவிட்டு வருகிறார்.
ப்ரீத்தி சர்மா
சன் டிவியின் `சித்தி 2’ தொடர் மூலம் புகழ் பெற்றுள்ள நடிகை ப்ரீத்தி சர்மா, குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தனக்கென தனியிடத்தைப் பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி சர்மா 6.68 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். மேலும், இதில் அழகு சாதனப் பொருள்கள், அணிகலன்கள் முதலான விளம்பரங்களையும் பதிவிட்டு வருகிறார்.
ராதிகா ப்ரீத்தி
சன் டிவியின் `பூவே உனக்காக’ தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை ராதிகா ப்ரீத்தி. ஆனால் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி 4.65 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ளார். இதில் அவர் அழகு சாதனம், வளையல் ஆகிய விளம்பரங்களைப் பகிர்ந்து வருகிறார்.
கம்பம் மீனா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்’, `பாக்யலட்சுமி’ ஆகிய தொடர்களின் மூலமாகப் புகழ் பெற்றுள்ள நடிகை கம்பம் மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் 1.31 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ள அவர் படப்பிடிப்புத் தளங்களில் இருந்து புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அழகு சாதனம் குறித்து இவர் பதிவிடும் விளம்பரங்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
வினுஷா தேவி
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான வினுஷா தேவி தற்போது `பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் 2.19 லட்சம் ஃபாலோவர்களை வைத்துள்ள இவர், புடவை, ஆடைகள், அணிகலன்கள் முதலான விளம்பரங்களை பகிர்ந்து வருகிறார்.