இன்றைய தலைமுறை நடிகைகளோ அல்லது பிரபலங்களோ சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட சீரியல் நடிகைகளுள் ஒருவர்தான் அர்ச்சனா குமார் . சுருட்டை முடி , கன்னக்குளி என பிளசண்டாக தோற்றமளிக்கும் அர்ச்சனா முதன் முதலாக சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலமாகத்தான் மீடியாவிற்குள் அறிமுகமாகிறார்.  சென்னையை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா  குமார் சென்னை பெண்கள் கிருஸ்தவ கல்லூரியில் தனது படிப்பை முடித்திருக்கிறார். அதன் பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் தனது தனித்துவமான நடனம் மற்றும் பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தார். 







விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த அர்ச்சனாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர தொடங்கியது. அடுத்ததாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்தார். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகள் , மாடலிங் , இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் என தன்ன படு பிஸியாக வைத்துள்ளார் நடிகை.







அம்மாதான் உலகம் என வாழும் பெண்களுள் நடிகை அர்ச்சனாவும் ஒருவர். தனது தோழியை கூப்பிவது போலவே வாடி , போடி என செல்லமாகத்தான் அம்மாவை அழைப்பாராம் அர்ச்சனா. இந்த நிலையில் அர்ச்சனா தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது சிறு வயதில் இருந்தே அர்ச்சனாவிற்கு நடனத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. 13 வயதில் ஒருமுறை மேடையில் ஏறி நடமாடிய அவரை நன்றாக ஆட தெரியவில்லை என பாதியிலேயே இறக்கிவிட்டார்களாம். அதன் காரணமாகவே நடனத்தை முறையாக கற்க வேண்டும் என்ற எண்ணமும் வெறியும் அவருக்கு ஏற்பட்டதாம் .  நடன வகுப்பில் சேர்ந்து முறையாக நடனத்தை கற்றிருக்கிறார். சிறு வயதில் நிகழும் இது போன்ற அவமானங்களை நாம் நேர்மறையாக எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறார் நடிகை. 






சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா, கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவிலும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார் அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது.