வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமடைந்தவர்கள் இந்த உலகில் ஏராளம். தமிழ் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அது யாராக இருந்தாலும் தெய்வங்களுக்கு நிகராக போற்றுவர். இப்படி பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமான தடைகளை உடைத்து படியாக மாற்றி உச்சம் தொட்டனர். 


அந்த வரிசையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் சேதுபதி என பலரும் சின்னத்திரை, கூத்துப்பட்டறை என கடின பகுதிகளை கடந்து நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். கேமரா முன்பு வருவதற்கு ஆண்களே இவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது பெண்கள் சந்திக்கும் நிலைமை இங்கு மிகவும் மோசம் என கருதப்படுகிறது. ”இதுவரை 250 ஆடிஷன் பார்த்துட்டேன். அங்க போனா அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க” என்று பிரபல டிவி சீரியல் நடிகை அபி நவ்யா தனது சின்னத்திரை பயணம் குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.


 






அதில், நான் முதலில் செய்தி வாசிப்பாளராகதான் என் வாழ்க்கையை தொடங்கினேன். அப்போதுதான் பிரியமானவள் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இரண்டையும் சமமாக கடந்து வந்தேன். பொதுவாக சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் அந்த ஃபீல்டில் தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும். இல்லை என்றால், மிகவும் கடின முயற்சியுடன்தான்  சீரியலில் நடிக்க முடியும்.


நான் சீறியலில் வாய்ப்பு தேடி செல்லும்போது என் முகத்திற்கு நேராக அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டார்கள்.இதுவரை 250 ஆடிஷனுக்கு மேல் பல இடங்களில் அட்டென்ட் செய்தேன். அங்கு பெரும்பாலான இடங்களில் இப்படிதான் கேட்டார்கள்.


அதேபோல், இன்ஸ்டாகிராமில் காஸ்டிங் டைரக்டர் என்று சொல்லி பேசிய ஒருவர் என்னுடைய முழு அடையாளத்தை துல்லியமாக விவரிக்கிறார். அதன்பிறகு விசாரித்ததில் அவர் போலி என்று தெரிந்தது. 


புதிதாக திரைக்குள் வர நினைக்கும் பல பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய புகைப்படத்துடன் கூடிய முழுவிவரத்தை கேட்பார்களே தவிர வேறு எதுவும் கேட்டமாட்டார்கள். பல பெண்கள் இப்படி மோசமாகி உள்ளனர். இதன் காரணமாக பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து  சினிமாவில் மீடூ புகார் வந்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.  






சீரியல் நடிகை அபி நவ்யா, சன்டிவியில் கயல், கண்மணி, ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது ஜீதமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்னும் புன்னகை கதாநாயகன் தீபக் குமாரை காதலித்து நிச்சயதார்த்தம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண