Tamil New Year Movie Release 2023: பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பல படங்கள் வெளியாவது சகஜம். அன்று வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அப்படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் படங்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் வரும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை விவரமாக பார்க்கலாம். 


பொதுவாக தமிழ் புத்தாண்டு(Tamil New Year) அன்று ஏராளமான திரைப்படங்கள் வெளியாவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு சில திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் மேலும் சில படங்கள் கடைசி நேரத்தில் சேரக்கூடும் அல்லது சிலவற்றின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கவும் படலம். தற்போதைய நிலவரத்தின் படி உறுதியாக வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன பார்க்கலாம்.




ருத்ரன் : 


நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படம் தான் 'ருத்ரன்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ். கதிரேசன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், சரத்குமார், சச்சு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  'தீமை பிறக்காது, படைக்கப்படுகிறது' என தலைப்பில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


தமிழரசன் :


இசையமைப்பாளராக இருந்து நடிகராக ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ள நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகிஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தமிழரசன்'. இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் சங்கீதா க்ரிஷ், சோனு சூட், சுரேஷ் கோபி, யோகி பாபு நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஒரு போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. 


யானை முகத்தான் :


மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் முதல் முறையாக இயக்கியுள்ள நகைச்சுவை திரைப்படம் 'யானை முகத்தான்'. ரமேஷ் திலக், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மனிதன் - கடவுள் இடையே நடக்க கூடியதை நகைச்சுவை கலந்து ஸ்வாரஸ்யமாக அமைத்துள்ளனர். இதில் ரமேஷ் திலக் கடவுள் பக்தராக நடித்துள்ளார். 



 


சாகுந்தலம் :


நடிகை சமந்தா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 14ம் வெளியாக உள்ள திரைப்படம் சாகுந்தலம். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தா சகுந்தலவாகவும், மலையாள நடிகர் தேவ் மோகன், துஸ்யந்த் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். கௌதமி, ஈஷார் ரெப்பா, மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


சொப்பன சுந்தரி :


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'சொப்பன சுந்தரி'. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், ரெடின் கிங்சிலி, சுனில் ரெட்டி, பிஜோர்ன் சுராவ் , அகஸ்டின் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


திருவின் குரல் :


நடிகர் அருள்நிதியின் நடிப்பில் மெடிக்கல் கிரைம் திரில்லர் படமாக ஏப்ரல் 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'திருவின் குரல்'. ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அருள்நிதி செவித்திறன் குறைவாக  இருக்கும் ஒரு மனிதராக நடித்துள்ளார்.