பொதுமக்களோட பண்டிகை கொண்டாட்டங்கள்ல திரைப்படங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கும். ஆடைகள் வாங்குறது, ஸ்பெஷலா சமைக்கறதுன்னு ஒருபக்கம் திட்டங்கள போடுற அதே சமயம், அவங்களுக்கு பிடிச்ச ஸ்டார்களோட படங்கள பாக்குறதுக்கும் பிளான் பண்ணிடுவாங்க. அந்த வகைல இந்த வருஷம், ரசிகர்கள ஏமாத்தாம, ஒரு பெரிய பட லிஸ்ட்டே இருக்கு.
விலகிய 'விடாமுயற்சி'.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!
2025-ம் வருஷம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்னா, அது அஜித் நடிப்புல உருவாகியிருக்கற விடாமுயற்சி திரைப்படம்தான். லைகாவோட பிரமாண்ட தயாரிப்புல, மகிழ் திருமேணி இயக்கத்துல, பெரும் எதிர்பார்ப்புல இருந்த இந்த படம், பொங்கலுக்கு வெளியாகும்னு அறிவிக்கப்பட்டிருந்துச்சு. ஆனா, சில காரணங்களால பொங்கல் ரேஸ்ல இருந்து விலகுறதா படக்குழு அறிவிச்சுருக்கு. அதனால, அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றமடைஞ்சுட்டாங்க. விடாமுயற்சி ஜனவரி மாத இறுதில வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.
லைகா அறிவிப்பால் வரிசை கட்டிய திரைப்படங்கள்
பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகாது என்ற அறிவிப்பு வந்ததும், ஏராளமான படங்கள் தற்போது ரிலீசுக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த பட்டியல் இதோ...
- கேம் சேஞ்சர் (தெலுங்கு/தமிழ்)
- வணங்கான்
- படை தலைவன்
- மெட்ராஸ்காரன்
- மதகஜராஜா
- காதலிக்க நேரமில்லை
- Ten Hours
- நேசிப்பாயா
- தருணம்
இதுல, ஜனவரி 10-ம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்போட, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்துல, ராம்சரண் நடிப்புல, தெலுங்குல உருவாகியிருக்கற கேம் சேஞ்சர் படம் தமிழ்லயும் வெளியாகுது. அதே நாள்ல, பாலா இயக்கத்துல, அருண்விஜய் நடிப்புல உருவாகியிருக்கற வணங்கான் படமும் ரிலீஸ் ஆகுது. அதே 10-ம் தேதி, மறைந்த கேப்டன் விஜயகாந்த்தோட மகன் விஜய பிரபாகரன் நடிப்புல உருவாகியிருக்கற படை தலைவன் படமும் வெளியாகுது. இந்த படத்த அன்பு இயக்கி இருக்காரு. இந்த படங்களோட போட்டி போட, வாலி மோகன் தாஸ் இயக்கத்துல, கலையரசன் உள்ளிட்டவங்க நடிச்சுருக்கற மெட்ராஸ்காரன் படமும் வெளியாகுது.
ஜனவரி 12-ம் தேதி, சுந்தர். சி இயக்கத்துல, விஷால் நடிச்சு ரொம்ப நாளா கிடப்புல போடப்பட்ட மதகஜராஜா படம் வெளியாகுது. பல வருஷங்கள் தாமதமா வெளியாகுற இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தில ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு.
ஜனவரி 14-ம் தேதி, கிருத்திகா உதயநிதி இயக்கத்துல, ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்புல உருவாகியிருக்கற காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகுது. காதல் படமான இந்த படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. அதே நாள்ல, விஷணுவர்தன் இயக்கத்துல, நடிகர் முரளியோட இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகுற நேசிப்பாயா படம் வெளியாகுது. இதுவும் ஒரு காதல் கதையா உருவாகியிருக்கு. இதோட, அரவிந்த் சீனிவாசன் இயக்கத்துல உருவாகியிருக்கற தருணம் படமும் வெளியாகுது.
மொத்தத்துல, இந்த லிஸ்ட்ட பார்க்கும்போது, இந்த பொங்கல் பண்டிகை, எந்த படத்த பாக்குறதுன்னு திரைப்பட ரசிகர்கள நிச்சயம் திக்குமுக்காட வச்சுடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.