இந்த வாரம் (ஜூலை 10) தமிழில் பல்வேறு கதைக்களங்களை கொண்ட நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. காதல், குடும்பம், கிரைம் த்ரில்லர்  மற்றும் ஆக்‌ஷன் ஜானர் விரும்பிகள் இந்த படங்களை கன்சிடர் செய்யலாம்

Continues below advertisement

இதயம் முரளி

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா , கயடு லோஹர் , ப்ரீத்த் முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இதயம் முரளி. காதல் , நட்பு , செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் என அத்தனை அம்சங்களையும் காட்டும் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதுவரை தயாரிப்பாளராக அறியப்பட்ட ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

லவ் ஓ லவ்

பவிஷ் மற்றும் நாக துர்கா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள லவ் ஓ லவ் படத்தில் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை மையமாகக் கொண்ட ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ளது.

Continues below advertisement

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

வெற்றி மற்றும் பிரிகிடா நடித்துள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஒரு குற்றவியல் திரில்லர். மர்மமான கொலை ஒன்றைச் சுற்றி நடைபெறும் விசாரணை மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது. பரபரப்பான திரைக்கதையை விரும்பும் ரசிகர்களை இந்த படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசுதேவ சுத்தம்

மகேந்திரன் மற்றும் அம்பிகா வாணி நடித்துள்ள வாசுதேவ சுத்தம் ஆக்‌ஷன் மற்றும் புராண அம்சங்கள் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. மர்மம், நம்பிக்கை மற்றும் அதிரடி சம்பவங்கள் பின்னிப் பிணைந்த கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வித்தியாசமான ஜானர் படங்களை விரும்புவோரின் கவனத்தை இந்த படம் ஈர்க்கக்கூடும்.