விமர்சனங்களுக்கு தடை கோரி தயாரிப்பளர் சங்கம் மனுதாக்கல்...போராட்டத்திற்கு ரெடியாகும் விமர்சகர்கள்
திரையங்கில் படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு யூடியூப் மற்றும் சமூக வலைதள விமர்சனங்களுக்கு தடை விதிக்க கோடி தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது
திரைப்பட விமர்சனங்களுக்கு தடை
சமீபத்தில் வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்குவா படத்திற்கு முதல் நாளில் தொடங்கியே சோசியல் மீடியா , யூடியூப் என எல்லா பக்கங்களில் இருந்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின. இது அப்படத்தின் வசூலில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் திட்டமிட்டு கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. கங்குவா படத்திற்கு மட்டுமில்லாமல் இன்னும் பல படங்கள் திட்டமிடப்பட்ட விமர்சனங்களுக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சில விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி இனிமேல் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் திரையரங்க வளாகத்திற்குள் யூடியுப் சேனல்களை விமர்சனங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விமர்சனங்களுக்கு தடை வழங்க மறுத்த நீதிமன்றம்
திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு யூடியும் சேனல் , சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்ய கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கால் செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு விமர்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முதன்மையான பொறுப்பு விமர்சகர்களுக்கு இருக்கிறது. அதே நேரம் வருடத்திற்கு 300 முதல் 400 படங்கள் வெளியாகும் சூழலில் எது நல்ல படம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அவசியமாக இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான படங்களுக்கு போதுமான கவனம் கிடைப்பதில்லை. இந்த படங்களை விமர்சகர்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இப்படியான நிலையில் முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனங்களுக்கு தடை கோரியுள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் மனு குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விமர்சனங்களுக்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது . நீதிமன்றத்தின் இந்த முடிவு நெட்டிசன்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
யார் பிரச்சனை ?
யூடியூப் சேனல்களின் பெருகத்திற்கு பின் சினிமா விமர்சனங்களில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். முன்பே பணம் வாங்கிக் கொண்டு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் விமர்சனங்களை வழங்குவது. ஒரு யூடியும் சேனல் அல்லது ஒரு சமூக வலைதள கணக்கு இருந்தா இருந்தால் நாமும் விமர்சனம் பண்ணலாம் என ஒவ்வொருத்தர் கிளம்பிவிடும் சூழலில் எது நல்ல விமர்சனம் எது இல்லை என்பது மக்கள் மத்தியில் குழப்பமே ஏற்படுகிறது. பயில்வான் ரங்கநாதன் , ப்ளூ சட்டை மாறன் , இட்ஸ் பிரசாந்த் என வெத்து விமர்சகர்கள் கொடுக்கும் ரிவியுவை நம்பிதான் மக்கள் ஒரு படத்தை பார்க்கவா வேண்டாமா என்பதை தீர்மாணிக்கும் நிலைமை இருந்து வருகிறது.