நடிகர்கள் அளவிற்கு இப்போது இயக்குநர்களும் புகழ்ச்சியை விரும்புகிறார்கள். இதற்காக தனியாக பணம் செலவழித்து சமூக வலைதள பிரபலங்களை வைத்து தங்களை தானே ப்ரோமோட் செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான முன்னணி நடிகரின் படத்தின் இயக்குநர் 40 லட்சம் செலவு செய்து தன்னை தானே ப்ரோமோட் செய்துகொண்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

யார் அந்த இயக்குநர்

தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் இந்த இயக்குநர்.  பிரபல ஹாலிவுட் இயக்குநரின் கதையை சுட்டு இவர் தமிழ் மற்றும் இந்தியில் இயக்கிய படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இவர் இயக்கிய பிற படங்களின் கதைகளையும் வேறு ஒரு இயக்குநரிடம் இருந்து சுட்டதாக சர்ச்சை எழுந்தது. கடைசியாக தமிழின் பெரிய ஸ்டார் ஒருவரை வைத்து இவர் இயக்கிய படம் தோல்வியடையவே அடுத்த சில ஆண்டுகள் சைலண்டாக இருந்தார்.  மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப அண்மையில் பிற மொழியின் சூப்பர்ஸ்டார் ஒருவரின் படத்தை இயக்கினார். இந்த படத்தையும் ரசிகர்கல் கழுவி ஊற்றவே ஃபீல்ட் அவு ஆகிட்டார் என பேச்சு எழுந்தது. 

Continues below advertisement

அண்மையில் தமிழின் முன்னணி நடிகரின் படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் நாயகன் நாயகி மற்றும் பிற நடிகர்களின் நடிப்பு சிறப்புதான் என்றாலும் திரைக்கதையில் பல ஓட்டைகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் எதோ இயக்குநர் காவியத்தை எடுத்தது போல் பாராட்டு பதிவுகளாக குவிந்து வருகின்றன.  கொடுத்த காசுக்கு மேல் கூவும் சில எக்ஸ் தள பிரபலங்கள் படத்தின் சொல்லி வைத்தது போல் ஒரே காட்சியை பாராட்டி அவரவர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.  மணிரத்னம் , லோகேஷ் கனகராஜ் , ஷங்கர் தமிழின் முன்னணி இயக்குநர்கள் எல்லாம் இந்த ஆண்டு சறுக்கியபோதும் நம்ம ஆள் கம்பேக் கொடுத்துவிட்டாரே என பீலா விடுகிறார்கள். அப்புறம் தான் தெரிகிறது இதெல்லாம் தன்னைப் பற்றி தானே அந்த இயக்குநர் போட சொன்ன பிட்டு என்று. இதற்காக மட்டுமே ரூ 40 லட்சம் அவர் செலவு செய்துள்ளதாக அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்கள் ஆதங்கத்தை கொட்டியபோது தெரியவந்தது. இன்னும் ஒரு தோல்வி படம் கொடுத்துவிட்டால் இனிமேல் தன்னால் மீண்டெழவே முடியாது என சுதாரித்த அந்த இயக்குநர் இப்படி ஒரு யுக்தியை பயண்படுத்தியுள்ளார்.