தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்த மோகன் என்பவர் வறுமையால் பாதிக்கப்பட்டு மதுரையில் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னு. இவரின் இளைய மகன் மோகன் என்பவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். 60 வயதான அவர் உயரம் குறைவானவர் என்பதால் 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள், அற்புதத்தீவு உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்துள்ளார். 


ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்துள்ளார். ஆனாலும் வேறு வேலை எதுவும் செட்டாகாத நிலையில், அவர் அப்பகுதியில் யாசகம் பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 31) பெரிய ரத வீதியில் ஆதவற்ற நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது பற்றி திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது சினிமாவில் துணை நடிகராக நடித்த  மோகன் என்பது தெரிய வந்தது. அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர் வைக்கப்பட்டது. மேலும் மோகன் மரணம் குறித்து மேட்டூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரேத பரசோதனைக்குப் பிறகு அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மோகனுக்கு 2 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர்.


ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புகழ் பெற்று பின்னர் காலப்போக்கில் வாய்ப்பு கிடைக்காமல் வறுமையின் பிடியில்ல் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சினிமா தொழிலில் இருக்கும் சங்கங்கள் தேவையான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க:  அதிர்ச்சியில் திரையுலகம்.. தேசிய விருது வென்ற கலை இயக்குநர் தற்கொலை.. என்ன காரணம்?


பாக்கியாவுக்கு லவ் யூ சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமியில் இன்று