Pragya Nagra : இணையத்தில் கசிந்த படுக்கை அறை வீடியோ... இந்த முறை ஜீவா பட நடிகையா ?
ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரக்யா நாக்ரா. அவரது தனிப்பட்ட வீடியோ என்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது

பிரக்யா நாக்ரா
ஜீவா நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. ஹர்யானாவைப் பின்புலமாக கொண்டிருந்தாலும் தனது நடிப்பு கரியரை தொடங்க தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்தார். தமிழில் அவர் நடித்த முதல் படமே தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்தபடி உள்ளன. மலையாளத்தில் வெளியான நதிகளில் சுந்தரி யமுனா படத்தில் நடித்தார். தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான லக்கம் படத்தில் நடித்தார்.
பிரக்யா நாக்ரா அந்தரங்க வீடியோ
சமீபத்தில் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்கிற பெயரில் வீடியோ ஒன்று இணையத்தில் வாரக்கணக்கில் வைரலாகியது. தியேட்டர் வாசலில் டிக்கெட்டிற்கு நிற்பது போல இந்த வீடியோவுக்காக ஒரு கூட்டமே இணையத்தில் திரிந்தது. மேலும் நடிகை ஓவியாவின் சமூக வலைதள கணக்கில் அவரை சீண்டும் வகையில் கமெண்ட் செய்தார்கள். ஆனால் ஓவியா அவர்களை எல்லாம் இடது கையில் தட்டி டீல் செய்தார். மேலும் இந்த வீடியோ தன்னுடையது தானா என்பது குறித்தும் அவர் விளக்கமளிக்க விரும்பவில்லை.
Just In




தற்போது அதேபோல் நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ என்று வீடியோ ஒன்று காட்டுத்தீ போல் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை வைத்து மறுபடியும் லைக் மற்றும் ஃபாலோவர்களுக்கு கடை போட்டிருக்கிறது ஒரு பெரிய சில்லரை கும்பல். அதே போல் வரிசையில் நிற்கிறது இன்னொரு கும்பல். இந்த வீடியோ உண்மையாகவே பிரக்யாவின் தனிப்பட்ட வீடியோதானா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்கிற விவாதம் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. சமீப காலத்தில் நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. இந்த வீடியோக்களை உருவாக்குபவர்களை காவல் துறை கண்டுபிடித்து தண்டித்தாலும் நாளுக்கு நாள் இந்த வழக்கம் அதிகரித்து தான் வருகிறது. சாமானிய மனிதர்கள் தொடங்கி நட்சத்திரங்கள் வரை டீப் ஃபேக் வீடியோக்களுக்கு இரையாகிறார்கள்.
இந்த வீடியோ குறித்து பிரக்யா நாக்ரா இதுவரை எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் அது குறித்து அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.