Vijay Varma New Lover: தமன்னாவை பிரேக்கப் செய்த சில மாதங்களில் புதிய காதலியோடு டேட்டிங் செய்யும் விஜய் வர்மா!
சில மாதங்களுக்கு முன்பு நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்த நிலையில், தற்போது விஜய் வர்மா புதிய காதலியோடு டேட்டிங் செய்து வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும், நடிகை தமன்னா மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக மாற்றியது தென்னிந்திய சினிமா தான். அந்த வகையில் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற நடிகையாகவும் மாறினார்.
ஆனால் சமீப காலமாக பாலிவுட் திரை உலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 35 வயதை கடந்த பின்னரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் தமன்னா, ஒரு சில நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், அவை அனைத்தும் வதந்தியாகவே கடந்து சென்றது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் வெளிப்படையாகவே டேட்டிங் செய்து வந்தார். எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான, 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெப் தொடரில் நடிக்கும் போது விஜய் வர்மாவை, தமன்னா காதலிக்க துவங்கினார். பொதுவாக படுக்கையறை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும் தமன்னா... விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது, விஜய் வர்மாவை காதலிக்கும் தகவலை மறைமுகமாக அறிவித்தார் .
மேலும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில், இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். கூடிய விரைவில் திருமண செய்தி வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்தது, இவர்களின் பிரேக்கப் செய்தி. தற்போது வரை பிரேக் அப் குறித்து, தமன்னா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்றாலும், தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் வர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முழுமையாக நீக்கினார். அதே போல் தற்போது தன்னுடைய திரைப்பட பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 6 மாதமாக காதல் தோல்வியால் சோகத்தோடு சுற்றிக் கொண்டிருந்த விஜய் வருமா, தற்போது புதிய காதலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 'தங்கல்' படத்தில் நடித்த, பாத்திமா சனா ஷாஹிகை தான் விஜய் வர்மா காதலித்து வருகிறாராம். இருவரும் மனிஷ் மல்கோத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'உல் ஜலூல் இஷ்க்' என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். திரைப்படத்தை தாண்டி இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக, பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.




















