பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காக  கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு. 


தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது இந்தியில் கவனம்செலுத்து வரும் டாப்சி நடித்துள்ள படம் Dobaaraa. 2018ம் ஆண்டு ஸ்பேனிஷில் வெளியான திரைப்படத்தை Dobaaraa என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. 






இந்நிலையில் இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை டாப்சியும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் திரைப்பட ரிலீஸ் என்றாலே நடிகர் நடிகைகள் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் அங்கே சர்ச்சையான கேள்விகளை  கேட்பதும் வழக்கமாகவே உள்ளது. ஆனால் டாப்சி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நக்கலாக பதில் அளித்த அவர் காபி வித் கரண் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டார். காபி வித் கரண் குறித்து பேசிய அவர், அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நக்கலாக தெரிவித்தார்.






காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்  அனைவரிடத்திலும் செக்ஸ் வாழ்க்கைகுறித்து கரண் ஜோகர் கேட்பதும் அது சர்ச்சையாவதும் வழக்கமாக உள்ளது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டே டாப்சி இப்படி பேசியுள்ளார் என இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.