'ஆடுகளம்' திரைப்படம் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைத்து ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நடிகை டாப்ஸி பன்னு. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்திருந்தார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். முதல் படமே வெற்றிப் படமாக அமைய அடுத்தடுத்து டாப்ஸிக்கு வாய்ப்புகள் குவிந்தன.
பாலிவுட் முன்னணி நடிகை :
தொடர்ச்சியாக ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு டாப்ஸியின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பவே அங்கே மிகவும் பிஸியாகி விட்டார். அவ்வப்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தலைகாட்டுவதும் உண்டு. தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'டங்கி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நடிப்பில் கவனத்தை செலுத்தி வரும் டாப்ஸி பிட்னெஸ் பயிற்சியிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளார். அவரின் ஈடுபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பது அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் வெளிப்படுகிறது.
சிக்ஸ் பேக்குடன் டாப்ஸி :
டாப்ஸி ஒரு பிட்னெஸ் ஃபிரீக் என்பதை நிரூபித்துள்ளார். தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர் டாப்ஸி என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தனது ஜிம் டிரைனர் சுஜீத் கர்குட்கருடன் சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் டாப்ஸி சிக்ஸ் பேக்குடன் காட்சியளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் டாப்ஸிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இந்த போஸ்ட் ஏராளமான லைக்ஸ்களையும் குவித்துள்ளது.