சினிமா ரசிகர்கள் பலர் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று காண ஆவலாக உள்ளனர. கடந்த செவ்வாய் அன்று கோலிவுட்டின் பிரம்மாண்டமான திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்ளரங்கத்தில் நடந்தது. 


அந்நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் படக்குழுவினரும், பல திரை பிரபலங்களும் ஊடகத்துறையினரும் , பொது மக்களும் பங்கு பெற்றனர். இப்படத்தின் ட்ரைலரை பார்த்த நடிகர் சூர்யா, அவரின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.






அதில், “என்ன ஒரு காட்சி! இயக்குநர் மணி சார், பல பிரபலங்களின் கனவை நினைவாக்கியுள்ளார். இப்படம் கர்ஜிக்கும் ப்ளாக் பஸ்டராக வெற்றி பெற, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.






ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் ரஜினி, நிகழ்ச்சியில் பேசியதாவது முதலில் பொன்னியின் செல்வன் கதையை  கேட்ட போது, குந்தவை கதாப்பத்திரத்தில் ஸ்ரீ தேவியை வைத்து கற்பனை செய்தேன். அதுபோல், கமல் ஹாசன் அருண்மொழிவர்மனாகவும், விஜயகாந்த் ஆதித்த கரிகாலனாகவும், சத்யராஜ் பழுவேட்டரையாரகவும் நடித்து இருந்தால்
நன்றாக இருக்கும் என யோசித்தேன்.


நானும் இப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்பட்டேன் பழுவேட்டரையார் கதாபாத்திரத்தில் நடிக்கட்டுமா என்று மணி சாரிடம் கேட்டேன். ஆனால், என் ரசிகர்கள் அதை நினைத்து வருத்தபடுவார்கள் என்று கருத்தை கொண்டு என் வேண்டுகோளை மணி மருத்துவிட்டார். மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதுதான் அவரை
தனித்துவப்படுத்துகிறது.


இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகிய பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க சரத் குமார், பிரபு, லால், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்