சாஸ்திர சம்ரதாயங்களின் படி முறையான திருமணங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் பல்வேறு தடங்கல்கள், கலாச்சார தடைகளை மீறி ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி ஒரு தமிழ்நாட்டு இளைஞனை கரம் பிரடித்தார் என்பது ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம். இந்த ஜோடிகள் தான் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா. இவர்களில் கதை பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல் இதோ உங்களுக்காக. 


 



வசீகரிக்கும் ஜோடி :



இளைஞர்களின் இதயத்துடிப்பாக அழகும், நேர்த்தியான நடிப்பும் சேர்ந்து திரையில் நட்சத்திரங்களாக மின்னியவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி. இவர்களில் அன்பான அழகான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல். இன்றும் இவர்களுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி, நட்பு ரசிகர்களை வசீகரிக்கிறது. 


 






அறிமுகமே அசத்தல் :


பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏரளமான ரசிகர்களை கொண்ட இவர் மிகவும் தாழ்மையானவர். சரவணன் என்ற அவரின் பெயரை சூர்யா என மாற்றியவர் இயக்குனர் மணிரத்னம். பெரும்பாலும் அவரின் படங்களில் கதாநாயகனுக்கு சூர்யா என்ற பெயரையே பயன்படுத்துவார்.  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' திரைப்படத்தில் அறிமுகமான சூர்யாவிற்கு அப்போது வயது 22. ஆரம்பத்தில் அவருக்கு படங்கள் எதுவம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜோதிகாவை அப்போது முதலில் சந்தித்தார் சூர்யா. இருவருமே அந்த சமயத்தில் தான் வெள்ளித்திரையில் கால் பதிக்க முயற்சி செய்தனர். 


நட்பு காதலாக மலர்ந்தது :


ஆரம்பத்தில் மொழி பிரச்சனையால் அதை கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு பின்னர் தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகை ஜோதிகா. ஜோதிகாவிற்கு தனது பணியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு, சக ஊழியர்களிடம் இருந்த பணிவு, வேலையில் அவர் காட்டிய நேர்மை இவற்றை ரசிக்க தொடங்கினார் சூர்யா.


இவர்களில் இரண்டாவது சந்திப்பிற்கு பிறகு இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறினார். நீண்ட நேரங்களுக்கு அவர்களின் உரையாடல்கள் தொடங்கின. பார்ட்டிகளுக்கு ஒன்றாக செல்ல தொடங்கினர். பின்னர் சூர்யாவின் 'நந்தா' திரைப்படத்தை பார்த்து இம்ப்ரெஸான ஜோதிகா தனது அடுத்த திரைப்படமான 'காக்க காக்க' திரைப்படத்தில் ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவை இயக்குனர் கௌதம் மேனனிடம் பரிந்துரைத்துள்ளார். 


 



சூப்பர் ஹிட் வெற்றி :



அங்கே தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. காக்க காக்க படம் வெளியான சமயத்தில் சூர்யா - ஜோதிகா நிச்சயம் முடிந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இருதரப்பு பெற்றோரின் சம்மதம் பெற முடியும் என நம்பினார். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சூர்யா - ஜோதிகா இருவருமே ஸ்டார் நடிகர்களாக முன்னேறினர். படத்தின் வெற்றியை போலவே இருவருக்கும் இடையில் இருந்த காதலும் வலுப்பெற்று கொண்டே இருந்தது.


கோலாகலமான திருமணம் :


2006ம் ஆண்டு சூர்யா - ஜோதிகா அழகான காதல் உறவு திருமணத்தில் முடிந்தது. செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக பிரபலங்களின் வருகையோடு கோலாகலமாக தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தின் படி சடங்கு சம்பிரதாயங்களுடன்  திருமணம் நடைபெற்றது. 






நிறைவான வாழ்க்கை :


இந்த அழகான ஜோடி 16 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு அழகான மகள் தியா மற்றும் ஒரு சிங்கக்குட்டி தேவ் வருகையும் அவரின் வாழ்வை மேலும் அழகாக்கியது. ஒரு அன்பான மகன், கணவர், தந்தை என எந்த ஒரு பொறுப்பில் இருந்தும் தவறாதவர் நடிகர் சூர்யா. என்னதான் பிஸியான ஷெட்யூல் இருப்பினும் குடும்பத்திற்காக நேரத்தை செலவிடுவதை உறுதி செய்பவர். 


எதுவும் தடையல்ல :


நடிகர் சூர்யா ஒரு சுத்தமான தமிழன் ஆனால் அந்த சமயத்தில் ஜோதிகாவிற்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. இருப்பினும் அவர்கள் தான் இன்றும் தமிழ் சினிமாவின் ஃபேவரட் ஜோடி. காதல் எல்லாவற்றையும் கடந்து செல்லும். வெற்றி பெறுவதற்கு தூய்மையான அன்பு மட்டுமே முக்கியம் மொழி கூட அதற்கு தடையாக இருக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்கள் சூர்யா - ஜோதிகா.