ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனது திறனை நிரூபித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து கருப்பு படத்தை இயக்கியுள்ளார். கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. பட பூஜா, போட்டோ ஷூட், படப்பிடிப்பு என விறுவிறுப்பாக நடைபெற்றது, சூர்யாவின் 45வது படம் என்பதால் முதலில் சூர்யா 45 என்றே அழைக்கப்பட்டது. பின்னர், சூர்யாவின் பிறந்தநாளில் படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. 

Continues below advertisement

சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு

இப்படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டது  சூர்யா கருப்பு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு நடந்து வந்தார். அதன் பின்னணியில் கோயில் திருவிழா கொண்டாடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதில், சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் கருப்பு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. 

கருப்பு பட டீசர் வெளியீடு

சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக வெளியான கருப்பு படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் படத்தின் டீசரில் சூர்யா ஓன் மேன் ஷோ காட்டியிருப்பதாக தெரிகிறது. படத்தின் டீசரில் அஞ்சான், வேல், கஜினி, சிங்கம், எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் காட்சிகளை திரும்ப பார்ப்பது போன்ற உணர்வை தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரம் குறையாத கருப்பாக ஆக்சனில் மிரட்டினாலும், கருப்பு மக்களின் ரசனையை வெல்வாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Continues below advertisement

அவர் தான் த்ரிஷாவா?

படத்தின் டீசரில் வழக்கறிஞராக வரும் சூர்யா தவறு செய்பவர்களை தண்டிக்கும் விதமாக ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். அதன் பின்னணியில் தான் இந்த கதையும் அமைகிறது. டீசரில் சூர்யா ஒரு பெண்ணின் கைகளை பிடிப்பது போன்ற ஒரு பிரேம் மட்டும் வந்து செல்கிறது. அது த்ரிஷாவின் கையாக இருக்கும் என ரசிகர்களின் யூகமாக உள்ளது. மேலும், என் பேரு சரவணன் எனக்கு இன்னொரு பெயர் இருக்கு.. அதுதான் கருப்பு என்பது போல் தெரிகிறது. தப்பு செய்பவர்களை தண்டிக்கும் கருப்பு சாமியாக சூர்யா வருவார் என தோன்றுகிறது. டீசர் முழுக்க ஆக்சன் காட்சிகளால் மிரள வைத்துள்ளார் சூர்யா. பிளாஸ்ட், தெறிக்க விட்டுள்ளனர் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.