தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றிப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக திகழ்கிறார்.

துப்பாக்கியால் சுட்ட  கார்த்திக் சுப்பராஜ்:


கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூர்யா 44 படத்தை இயக்கி வருகிறார். கங்குவா படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், சூர்யா 44 படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஒரு மாறுபட்ட கேங்ஸ்டராக நடிக்கிறார்.


துப்பாக்கிச்சண்டைகள் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் இடம்பெறும் துப்பாக்கிச் சண்டை காட்சியை படமாக்கும்போது கார்த்திக் சுப்பராஜ் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.







விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு:

வெளிநாட்டில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஸ்ட்ண்ட் கலைஞர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகர்கள் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாசர், கருணாகரன், சுஜித் ஷங்கர், ப்ரேம்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்த படத்தில் சூர்யாவின் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டு வருகிறது.


கங்குவா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் வெளியீட்டிற்கு பிறகு சூர்யா 44 படத்தின் பணிகளை மேலும் தீவிரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கங்குவா படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருப்பதால் அதன் வெளியீட்டில் சூர்யா மற்றும் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்.