ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் 14வது நாள் எபிசோட் இன்று. நேற்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என காடர்கள், வேடர்கள் அணிக்கு கொடுத்த மகிழ்விக்கும் டாஸ்க் நிறைவு பெற்று, வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மூன்றாம் உலகம் தீவில் உணவுக்கு வழியின்றி காயத்ரி, இந்திரஜா தவித்துக் கொண்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழலில் இன்ற 14வது நாள் எபிசோட் எப்படி இருந்தது என்று பார்க்கலாம்...


 






 


இம்யூனிட்டி சேலஞ்ச்...!


நீண்ட நாட்களுக்கு பின் நல்ல உறக்கம் எடுத்ததாக வேடர்கள் அணியின் ஐஸ்வர்யா தெரிவித்தார். ப்ரஸ் செய்ய முடியவில்லை என பாரு வருத்தம் தெரிவிக்க, ‛ஆடு மாடு ப்ரஸ் செய்கிறதா....’ என பெசன்ட் ரவி சொல்ல, ‛என்னை ஆடு, மாடு என்கிறீர்களா...’ என வழக்கம் போல வம்புக்கு வந்தார் பார்வதி. மற்றொரு புறம் இம்யூனிட்டி சேலஞ்சிற்கு தயாராகி கொண்டிருந்தது காடர்கள் அணி. இன்று எலிமினேஷன் நாமினேஷன் இருக்கும் என்பதால் ஒருவரை நாமினேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. கடந்த 3 போட்டிகளை இழந்த காடர்கள், இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் தயாராகினர்.




இந்த டாஸ்கில் கண்டிப்பாக காடர்களை காலி செய்ய வேண்டும் என வேடர்கள் அணி திட்டமிட்டது. ‛அடிக்கிறோம்... தூக்குறோம்... காலி பண்றோம்...’ என அம்ஜத் தன் அணிக்கு உற்சாகமூட்டினார். அதில் தோற்றால் என் மீது அனைவரும் திரும்புவார்கள் என்று எதார்த்ததை பார்வதி தெரிவித்தார். 


வாள் ஒப்படைப்பு!




முன்பு இம்யூனிட்டி சேலஞ்ச் ஜெயித்து பெற்ற வாளை, வேடர்கள் அணி திரும்ப அர்ஜூனிடம் ஒப்படைத்தனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவருக்கே அந்த வாள். அந்த வாள் இருக்கும் அணியில் எலிமினேஷன் இல்லை. நாக்கில் உப்பு பட்டதும், அனைவருக்கும் குளிர் போய் நன்றாக தூங்கினீர்களா... என்று வேடர்கள் அணியை அர்ஜூன் கிண்டலடித்தார். ‛என்ன பாரு ஏதோ பிரச்சினை போல..’ என அர்ஜூன் கேட்க, ‛குடும்பம்னா பிரச்சினை இருக்கும் ....’ என தத்துவம் பேசினார் பார்வதி. இப்போது டாஸ்க் பற்றி அர்ஜூன் விவரித்தார். 


விபரீத டாஸ்க் ரெடி...!




தொட்டி ஒன்றில் போட்டியாளர் படுக்க வேண்டும். கடல் நீரை எடுத்து தொட்டியில் நீர் நிரப்ப வேண்டும். முந்தைய டாஸ்கில் ஜெயித்தவர்களுக்கு இரு சலுகை தரப்பட்டது. முதல் ரவுண்டில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாலியை பயன்படுத்தலாம். மேலே ஏறி நடந்து வந்து ஊற்ற வேண்டாம், நேரடியாக தொட்டியில் ஊற்றலாம். இந்த சலுகையை காடர்கள் அணி பெற்றது. பார்வதி-ஐஸ்வர்யா, விஜயலட்சுமி-லேடி கேஷ் ஆகியோர் தொட்டியில் படுத்துக் கொள்ளும் டாஸ்கை எடுத்துக் கொண்டனர். உண்மையில் அது ரிஸ்க் நிறைந்த டாஸ்க் தான்.




வழக்கம் போல காடர் அணிக்கு துவக்கத்தை சிறப்பாக தொடங்கியது. அம்ஜத் கீழே விழுந்து, எலும்பில் அவருக்கு அடிபட்டது. இதனால் கடும் சிரமத்திற்கு மத்தியில் வேடர்கள் அணி டாஸ்கை செய்தது. காடர்கள் அணியும் கடுமையாக போராடியது. காடர்கள் அணியில் லேடி கேஷ், வேடர்கள் அணியில் ஐஸ்வர்யா டார்க்கெட் செய்யப்பட்டனர். உண்மையில் தொட்டி நிரம்பியும் லேடி கேஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்பாக மூச்சை பிடித்து அந்த தொட்டியில் டாஸ்க் செய்தனர். 




வெற்றி பெற்ற காடர்கள்!


டார்க்கெட் செய்த படி முதல் ரவுண்டில் லேடி கேஷ் பெட்டி நிரம்பி, மூச்சு பிடிக்க முடியாமல் அவர் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா வெளியேறினார். இதனால் வேடர்கள் முன்னிலை வகித்தனர். அடுத்ததாக காடர்கள் விஜயலட்சுமி, வேடர்கள் பார்வதி பக்கம் திரும்பியது டாஸ்க். காடர்கள் சிறப்பாக விளையாடி பார்வதியை வெளியேற்றினர்.




இதனால் மூன்று டாஸ்களுக்கு பின் முதல் முறையாக காடர்கள் அணி வெற்றி பெற்றனர். அதை கொண்டாடித்தீர்த்தனர். அதே நேரத்தில் போராடி தோற்றதால் வேடர்கள் அணியின் பெசன்ட் ரவி உள்ளிட்டோர் விரக்தியடைந்தனர்.


எலிமினேஷனில் வேடர்கள் அணி! 




பின்னர் வெற்றி குறித்து காடர்கள் அணியிடம் அர்ஜூன் கருத்து கேட்டார். இரு அணியின் ஈடுபட்டிற்கு அவர் விசில் அடித்து உற்சாகப்படுத்தினார். பெரிய வித்தியாசத்தில் காடர்கள் வெற்றி பெற்றதாகவும், அவர்கள் ஏதோ ஒரு ஸ்டாட்டர்ஜி செய்திருக்கிறார்கள் என காடர்களை பாராட்டினார். தோற்ற அணி ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு வர வேண்டும் என வேடர்கள் அணியை அர்ஜூன் அழைத்தார். வெற்றி பெற்றதால் காடர்கள் அணிக்கு வாள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என்கிற நிம்மதியோடு காடர்கள் அணி தீவு திரும்பியது. நாளை ட்ரைப் பஞ்சாயத்தில் வேடர்களில் ஒருவர் நாமினேஷன் என பரபரப்பாக முடிந்தது இன்றைய எபிசோட்!