ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியின் 10வது நாளான இன்று பரபரப்பிற்கு பஞ்சமில்லாத காட்சிகள் காத்திருக்கின்றன. மூன்றாம் உலகம் தீவில் அடைக்கப்பட்ட சிருஷ்டி, இந்திரஜா, காயத்ரி ஆகியோ மூவருக்கும் நேற்று டாஸ்க் கொடுத்த அர்ஜூன், அதில் போட்டியின் அடிப்படையில் காயத்ரி-சிருஷ்டியை மோதவிட்டார். அதில் காயத்ரி வெற்றி பெற, சிருஷ்டி தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து வெளியேற அர்ஜூன் உத்தரவிட்டார். அதன்படி கண்ணீருடன் சிருஷ்டி அங்கிருந்து வெளியேறினார். தற்போது அந்த தீவில் காயத்ரி மற்றும் இந்திரஜா மட்டும் உள்ளனர். அவர்களுக்கும் டாஸ்க் காத்திருக்கிறது.






 


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ட்ரைப் லீடரை தேர்வு செய்ய வேடர் அணியில் ஆலோசனை நடந்து வருகிறது. நேற்றைய நாளில் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டும் என பார்வதி கோரிக்கை வைத்தார். ஆனால் பார்வதியில் செயல்பாடுகளால் அவரை வெறுக்கும் சக போட்டியாளர்கள், அவரை தலைவராக ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக லெட்சுமி ப்ரியா, ஐஸ்வர்யா, நந்தா உள்ளிட்ட பெரும்பாலானோர் பார்வதி தலைமையை விரும்பவில்லை என ஆலோசனையில் ஓப்பனாக பேசினர். யார் அடுத்த ட்ரைப் லீடர்... மூன்றாம் உலகம் தீவில் உள்ள காயத்ரி-இந்திரஜா நிலை என்ன? என்பது தான் இன்றைய சர்வைவர்... வாங்க பார்க்கலாம்....


லீடருக்கு இரு அணியிலும் கடும் போட்டி!




காடர் அணியில் ராம் சில வியூகம் வகிப்பதாகவும், அவருக்கு எதிராக செயல்படலாம் என விக்ராந்த் கூறுகிறார். ஆனால் அவருக்கு நான் ஓட்டளிப்பேன் என உமாபதி கூறுகிறார். இங்கு அப்படியென்றால் வேடர் அணியில் பார்வதிக்கு லீடர் வாய்ப்பு தரலாம் என்கிறார் அம்ஜத். ஆனால் லெட்சுமி ப்ரியாவிற்கு பார்வதிக்கு அதற்கான விருப்பம் துளியும் இல்லை என்கிறார். நன்றி உணர்வோடு செயல்படும் ஒருவரை பரிந்துரைக்கலாம் என ஓலை வருகிறது. அதன் படி வேடர் அணியில் பெசன்ட் ரவியை பரிந்துரைக்கின்றனர். காடர் அணியில் விஜயலட்சுமியை பரிந்துரைக்க முடிவு செய்தனர். போன வாரம் தோல்விகள் நிறைய சந்தித்ததால் விஜயலட்சுமியை லீடராக்கலாம் என விக்ராந்த் கூறுகிறார். தனக்கும் அந்த வாய்ப்பு வேண்டும் என ராம் கேட்கிறார். ஆனால் அவரை அங்கு யாரும் பரிசீலிப்பதாக தெரிகிறது. ரவி-அம்ஜத் என இருவரை லீடராக்கலாம் என்கிற முயற்சியில் வேடர் அணியும் தேர்வாகும் பகுதிக்கு புறப்படுகின்றனர். 


லீடரை வெளியேற்றியது சரியா? 




லீடரை எலிமினேட் செய்த காடர் அணியின் முடிவு குறித்து வேடர் அணியிடம் அர்ஜூன் கருத்து கேட்டார். தில்லான முடிவு என லெட்சுமி ப்ரியாவும், காயத்ரியை விட ராம் பெட்டர் என நந்தாவும், நமக்கு பிடித்த இந்திரஜாவை எலிமினேட் செய்துவிட்டார்களே என்ற கோபத்தில் காயத்ரியை எலிமினேசன் செய்திருக்கலாம் என பெசன்ட் ரவியும் கருத்து தெரிவித்தனர். அவர்களின் அனுமானம் சரியா... என விக்ராந்திரடம் அர்ஜூன் கேட்டார். ‛அந்த அணியில் இருப்பவர்கள் புத்திசாலிகள்,’ என்று விக்ராந்த் கூறினார். நிறைய பாடங்களை அவர்கள் விட்டுச் சென்றதாக காடர் அணியின் விஜயலட்சுமி கூறினார். பின்னர் புதிய ட்ரைப் லீடர் தேர்வு தொடங்கியது. 


விஜயலட்சுமி-லேடி கேஷ் தேர்வு!




காடர் அணியில் விஜயலட்சுமி, சரண், லேடிகேஷ் போட்டியிட்டனர். அவர்களிடம் எதற்காக ஓட்டளிக்க வேண்டும் என்று பேச அழைத்தார். 


விஜயலட்சுமி: நன்றி உணர்ச்சி எனக்கு சிறு வயதில் உள்ளது. தீவில் ஆண்கள் எங்களுக்குசெய்யுமாறு கைமாறுக்கு அதை நன்றி உணர்ச்சியில் காட்ட விரும்புகிறேன்.


லேடி கேஷ்: எனக்கு ஒரு கை கொடுத்தால் ரெண்டு கை கொடுக்க விரும்புகிறேன். இரு கைகளை கொடுக்க விரும்புகிறேன். 


சரண் சக்தி: இந்த ட்ரைபிள் நான் தான் சின்ன பையன். நான் சொல்வது எடுபடுமா என்ற சந்தேகம் இருந்தது. முதல் நாளே அனைத்தும் பிரேக் ஆனது. எனக்கு அனைவரிடமும் டச் இருப்பதால் நான் லீடர் ஆகலாம் என்று நினைக்கிறேன். 


இதில் விஜயலட்சுமியும், லேடி கேஷ் இருவரும் அதிக ஓட்டு பெற்று லீடர் தேர்வுக்கு தேர்வாகினர். 


 


பெசன்ட் ரவி-அம்ஜத் கான் தேர்வு!




அதே பார்முலா தான் வேடர் அணியிலும். பெசன்ட் ரவி, அம்ஜத், பார்வதி ஆகிய மூன்று பேர் லீடர் ஆக விரும்பினார். அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 


பெசண்ட் ரவி: எனக்கு அணியில் நிறைய உதவியுள்ளனர். அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்.


அம்ஜத்: நான் உங்கள் அனைவருக்கும் சப்போர்ட்டாக இருப்பேன். எனக்கு ஓட்டளித்தால் உறுதுணையாக இருப்பேன்


பார்வதி: என்னுடைய குவாலிட்டி அனைத்தையும் அனைவரின் ஒத்துழைப்போடு வெளிப்படுத்தி அனைவரையும் அரவணைத்து செல்வேன். 


அதிக ஓட்டுகள் அடிப்படையில் பார்வதி தோல்வியடைந்துல பெசன்ட் ரவி-அம்ஜத் ஆகியோர் லீடர்தேர்வுக்கு தேர்வாகினர். 


திடீர் திருப்பம்... லீடரான அம்ஜத்!




மண்டை ஓடு ஒன்றை கீழே விழவிடாமல் மற்றொருவர் வைத்திருக்கும் மண்டை ஓட்டை கிழே விழ வைக்கவேண்டும் என்பது தான் போட்டி. அதில் துவக்கத்தில் அம்ஜத் அதிக பாய்ண்ட் எடுத்தார். பின்னர் ரவியும் பதிலும் மண்டை ஓடுகளை தட்டினார். மொத்தமுள்ள ரவுண்டில் அதிக பாய்ண்ட் எடுத்து அம்ஜத் லீடராக தேர்வு செய்யப்பட்டார். அனைவரின் விருப்பம் ரவியாக இருந்த நேரத்தில் அம்ஜத் வெற்றி பெற்றார். இருப்பினும் அம்ஜத்தையும் அனைவரும் இரண்டாவது ஆப்சனாக வைத்திருந்ததால் அவரது வெற்றியையும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 





காடர் லீடரானார் விஜயலட்சுமி!


அதே போல் காடர் அணியில் நடந்த போட்டியில் அதிக பாய்ண்ட் பெற்று விஜயலட்சுமி காடர் அணியின் லீடராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் வெற்றி பெற்ற லீடர்களிடம் உங்கள் அடுத்தபணி என்ன என்று கேட்டார். இதற்கு முன் இருந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டும். முழு வீச்சில் டாஸ்க் செய்ய வேண்டும். எங்கள் கவனம் இனி இதில் தான் இருக்கும் என விஜயலட்சுமி கூறினார். இதே ஒற்றுமை இருந்தாலே போதும், வேடர் அணி சிறப்பாக இருக்கும் என முன்னாள் லீடர் லெட்சுமி ப்ரியா தெரிவித்தார். இரு அணிகளுக்கும் பெஸ்ட் ஆப் லக் சொல்லி அவர்களை தீவிற்கு அனுப்பி வைத்தார் அர்ஜூன். தீவில் தான் அடுத்த தீ பற்றியது. 




திருந்தாத காடர் அணி!


தீவுக்கு சென்ற வேடர் அணியில் அடுத்தகட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. யாரை வெளியேற்றுவது என்று அடுத்ததாக ஆலோசித்தனர். அதற்கான ஆலோசனையில் பார்வதி மீது தான் அனைவரின் பார்வை விழுந்தது. தன்னை அனைவரும் ஒதுக்கி வைத்திருப்பதாகவும், நான் மாற நினைத்தாலும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்று பார்வதி குற்றம்சாட்டினார். இதற்கிடையில் கார்ட தீவில் மோசமான பேச்சு அரங்கேறியது. அவர்கள் உண்மையில் ஒற்றுமையாக இருக்கிறார்களா.. இல்லை இருப்பது போல நடிக்கிறார்களா.. என்று உமாபதி சந்தேகம் கிளப்பினார். அதைத் தொடர்ந்து அணியினர் அனைவரும் அவர்களை கிண்டலடித்தனர். ‛ஆட ஐஸ்வர்யா... பாட பார்வதி....’ என விக்ராந்த் கிண்டலித்தார். அவரோடு உமாபதியும், சரணும் சேர்ந்து, ஏன் விஜயலட்சுமியும் அதை ரசித்து கிண்டலடித்தனர். அணி மீதான கவனத்தை கடந்து அவர்கள் எதிரணியை கிண்டலடிக்கும் செயலில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே தோல்வியை சந்தித்த அணி அது. பார்க்கலாம் புதிய லீடர், புதிய திருப்பம் தருவாரா என்று.