அஞ்சான் படத்தைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து கென் கருணாஸ் இந்த பாடலை எழுதியுள்ளார்.
கடந்த மே மாதம் வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ300 கோடிக்கும் மேல் வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. கருப்பு படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீதும் பெரியளவில் எதிர்பார்ப்பு கூறியுள்ளது. அந்த வகையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கென் கருணாஸ் எழுதியிருக்க சூர்யாவே பாடியுள்ளார். அஞ்சான் படத்தில் எக் தோ தீன் பாடலுக்குப் பின் 12 ஆண்டுகள் கழித்து சூர்யா மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத் தக்கது
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
20 வயது இளம் பெண் 40 வயதுடைய நாயகனை காதலிப்பதை என்பதே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மையக்கதை. கஜினி , அயன் ஆகிய படங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்த சூர்யாவை நினைவுபடுத்தும் விதமாக இப்படம் ஆக்ஷன் , க்ளாஸ் , ரொமான்ஸ் என ஒரு முழு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறது. சிதாதா என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
