ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் சாமி. இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. படத்திற்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த,விஜய் , சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். விழா மேடையில் பேசிய சூர்யா தனது சினிமா கெரியரில் சூப்பர் ஸ்டார் போன்ற நடிகர்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக பேசியிருந்தார்.






அவர் பேசியதாவது : ”நம்ம ஆள்காட்டி  விரலை சில நேரம் நம்ம கேவலமாகவும் விமர்சிப்போம். ஆனால் அந்த விரலை அப்பா சின்ன வயசுல பிடிச்சு நட அப்படினு சொல்லும் பொழுது ரொம்ப ஆறுதலாக இருக்கும். ஒரு கூட்டத்துல போகும் பொழுதும் அந்த விரலை பிடிச்சுக்க சொல்லுவாங்க. அப்பா என்னை சினிமாவோட வாசல் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டாங்க. இதுக்கு பிறகு  நீதான் போகனும்னு சொல்லிட்டாங்க. ஆனால் எனக்கு ஆள்காட்டி விரலாக ரஜினிசாரை நினைக்குறேன், கமல் சாரை நினைக்குறேன். இப்போ இருக்குற விஜய்,  அஜித்,விக்ரம் சார் எல்லோரையும் நினைக்குறேன். இவங்கள பார்த்துதான் நிறைய கத்துக்கிட்டேன். தினமும் செய்தித்தாள்களை புரட்டி பார்ப்பேன். காரணம் ரஜினி சார் படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு பார்க்கத்தான்.”
*






அதன் பிறகு பேசிய படத்தின் நாயகன் விக்ரம் “என்னை பொறுத்தவரைக்கும் எப்போதுமே ஒரே சூரியன் , ஒரே நிலா அது மாதிரி தமிழ் சினிமாவுலை ஒரே சூப்பர் ஸ்டார். நான் அவரோட ரசிகர் மட்டுமல்ல மிகப்பெரிய வெறியன்னுதான் சொல்லனும். எனக்கு சினிமாவுல பெரிய பெரிய படங்கள் பண்ணனும் வீடு முழுக்க விருதுகள் வாங்கி கேடயமா அடுக்கி வைக்கனும்னு ஆசை இருந்தது. அப்படியான ஒரு விருதை ரஜினி  சார்க்கிட்ட இருந்து வாங்கியதில் மகிழ்ச்சி “ என்றார்.