ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. பூஜா ஹெக்டே , ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராம் , கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் சூர்யாவுக்கு வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது ரெட்ரோ திரைப்படம்
ரெட்ரோ வசூல்
நேற்று மே 25 ஆம் தேதியோடு திரையரங்கில் 25 நாட்களை நிறைவு செய்தது ரெட்ரோ. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை , சூர்யாவின் நடிப்பு , சந்தோஷ் நாராயணனின் இசை என படத்தில் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருந்தன. அடுத்தடுத்த நாட்களில் வசூலில் ஏற்றம்காணவே செய்தது. முதல் நாளில் ரெட்ரோ படம் ரூ 46 கோடி வசூலித்தது. தொடர்ந்து 5 நாளில் உலகளவில் ரூ 104 கோடி வசூலித்தது. உலகளவில் ரெட்ரோ ஊ 235 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்பது குறிப்பிடத் தக்கது
ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் தேதி
ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. வரும் மே 31 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
சூர்யா 45
அடுத்தபடியாக சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. படத்திற்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 46 ஆவது படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க இருக்கிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.