கருப்பு டீசர் 

நடிகர் சுர்யா இன்று தனது 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத் முன்னிட்டு ட்ரீம் வாரியர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள நிலையில் த்ரிஷா கதா நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இப்படத்திறு இசையமைத்துள்ளார். 

டீசர் எப்படி இருக்கு

வேல் , சிங்கம் போன்ற படங்களில் முழு மாஸ் ஹீரோவாக சூர்யாவின் நடிப்பிற்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சமீப காலத்தில் சூர்யா இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அனத அளவு  வரவேற்பைப் பெறவில்லை. தற்போது சூர்யாவை முழுக்க முழுக்க ஒரு உள்ளூர் மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக கருப்பு டீசரில் காட்டியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. சாய் அப்யங்கரின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஏற்றபடி ஹைப் ஏற்றும் வகையில் அமைந்துள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் அனைத்து கமர்சியல் அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

த்ரிஷாவுக்கு எழுதிய கதையா கருப்பு

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆர்.ஜே பாலாஜி. இதனைத் தொடர்ந்து த்ரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்கிற படத்தை இயக்கவிருந்தார். இதனிடையில் சூர்யா பட வாய்ப்பு அவருக்கு வந்தது. தற்போது கருப்பு பட டீசர் பார்க்கையில் த்ரிஷாவுக்கு எழுதிய மாசாணியம்மன் பட கதையை சூர்யாவுக்கு ஏற்ற வகையில் ஆர்.ஜே பாலாஜி இந்த கதையை மாற்றியமைத்திருப்பது தெரிகிறது. பெண் தெய்வமான  மாசாணியம்மனுக்கு பதிலாக கருப்பு என்கிற ஆண் தெய்வம் இடம்பெற்றுள்ளது. த்ரிஷா இந்த கதையில் நடிப்பதாக இருந்திருந்தால் நாயகிக்கு ஏற்ற வகையில் ஹ்யூமர் வைத்து இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருப்பார். தற்போது சூர்யா ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் காட்சிகளை வைத்து கருப்பு படத்தை இயக்கியுள்ளார். இந்த காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம் .