ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியுள்ளது கருப்பு. ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் மே 14 ஆம் தேதி கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சூர்யா ரசிகர்கள் கடந்த ஓராண்டு காலமாக மிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் படம் கருப்பு. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திற்கு சூர்யா கருப்பு படப்பிடிப்பில் இணைந்தார் . முன்னதாக ஆர் ஜே பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசானி அம்மன் என்கிற படத்தை இயக்கவிருந்தார். பின் இதே கதையை சூர்யாவுக்கு ஏற்ற மாற்றி கருப்பு படத்தை இயக்கினார். முன்னதாக இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்து பின் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2025 நவம்பரில் கிட்டதட்ட முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. 

Continues below advertisement

ஓடிடி விற்பனை 

கருப்பு படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு படத்திற்கு சரியான ஓடிடி விலை கிடைக்காதது முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போது கருப்பு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 

சூர்யா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி 

கருப்பு படம் மே மாதம் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் மற்றொரு படமும் ஒரு சில மாதங்களில் வெளியாக இருக்கிறது. வெங்கி அட்லூர் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடை பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதம் இடைவெளிக்குள் அடுத்தடுத்து சூர்யாவின் இரு படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.