சூர்யா - ஜோதிகா ஜோடியின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ஜோதிகா பகிர்ந்துள்ள திருமண கொண்டாட்ட புகைப்படங்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகைகள் அன்பை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா, தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு மீண்டும் திருமண உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொண்டார்கள். குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜோதிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த நிகழ்வை அவர் தங்களது உறவின் ‘The Sequel’ என குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளை நிற திருமண உடையில் ஜோதிகாவும், அவருக்கு இணையாக சூர்யாவும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இரண்டு தசாப்தங்களை கடந்தும் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை இப்படியான காதல் நிறைந்த தருணங்களுடன் கொண்டாடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Continues below advertisement

குவிந்த நடிகைகளின் கமெண்ட்ஸ் 

இதற்கிடையே, ஜோதிகாவின் பதிவுக்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் அன்பையும் கமெண்ட்களாக பதிவிட்டுள்ளனர். காஜல் அகர்வால், அனுபமா பரமேஸ்வரன், சம்யுக்தா ஹெக்டே, ஆண்ட்ரியா ஜெர்மையா, சாயிஷா, ஸ்நேகா ரெட்டி, அபர்ணா பாலமுரளி, பார்வதி மற்றும் சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

காஜல் அகர்வால் மற்றும் பார்வதி ஹார்ட் எமோஜிகளை பதிவிட, அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து மூன்று ஹார்ட்களை பதிவிட்டுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, “I liked this photo 16 timessss” என உற்சாகமாக கமெண்ட் செய்துள்ளார். ஆண்ட்ரியா “This is so beautiful” எனவும், சாயிஷா “Absolutely gorgeous!!!” எனவும் பதிவிட்டுள்ளனர். அபர்ணா பாலமுரளி மற்றும் ஸ்நேகா ரெட்டி உள்ளிட்டோரும் ஹார்ட் எமோஜிகள் மூலம் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சூர்யாவுக்கு இத்தனை ரசிகைகளா!

இந்த கமெண்ட்ஸ் தற்போது ரசிகர்களிடையே தனி கவனத்தை பெற்றுள்ள நிலையில், “அடேங்கப்பா... சூர்யாவுக்கு இத்தனை நடிகைகள் ரசிகைகளா?” என நெட்டிசன்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.

சூர்யா - ஜோதிகாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, தங்களது திருமண வாழ்க்கையும் இப்படியான அன்பும் புரிதலும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜோதிகா பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள், 20 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் அவர்களின் பயணத்தை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடும் தருணமாக மாறியுள்ளது.