புதிதாக வாங்கிய காரில் சூர்யாவும் ஆர் ஜே பாலாஜியும் சென்னை சாலையில்  ரவுண்ட்ஸ் வந்த வீட்யோவை ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் இப்படம் ரூ 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சூர்யாவின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. திரையரங்கைத் தொடர்ந்து கருப்பு திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

புதிய கார் பரிசளித்த சூர்யா 

கருப்பு திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ஆர் கலைவானன் ஆகியோருக்கு சூர்ய புதிய 30 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 பேட்மேன் எடிஷன் மின்சார காரை பரிசாக வழங்கியிருந்தார். கடைசியாக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கும் இதே போல் ஒரு காரை சூர்யா தற்போது பரிசாக வழங்கியுள்ளார். புதிதாக வாங்கிய காரை சூர்யா ஓட்ட அவருடன் சேர்ந்து பயணம் செய்யும் வீடியோவை ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

முதல் நாளிலிருந்தே, நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள். அந்த ஒரு நம்பிக்கை, ஒரு கனவை நனவாக்கியது . அந்த ஒரு ஆதரவு,என் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியாகத் தொடங்கிய ஒன்று, இன்று நிஜமாகவும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகவும் மாறியுள்ளது...! சூர்யா சார் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது! நீங்கள் என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டீர்கள். லவ் யூ சார் . உங்கள் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கொண்ட இந்த அழகான உறவுக்கும் நன்றி . இதை நான் என்றென்றும் போற்றுவேன்...!" என ஆர் ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார்.