சூர்யா ஜோதிகா கொடுத்த சர்ப்ரைஸ்...சர்வம் மாயா பட நடிகை உற்சாகம்
சர்வம் மாயா படத்தில் க்யூட்டான பேயாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா ஜோதிகா இருவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்

அண்மையில் நிவின் பாலி நடித்து மலையாளத்தில் வெளியான சர்வம் மாயா திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்கில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் ஜென் ஸி பேயாக நடித்துள்ள ரியா ஷிபு பார்வையாளர்களின் மகனதை கவர்ந்துள்ளார். பலதிசைகளில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தி வரும் நிலையில் அவருக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
யார் இந்த ரியா ஷிபு ?
பிரபல திரைப்பட மற்றும் விநியோகஸ்த நிறுவனமான எச்.ஆர் பிக்ச்சர்ஸ் உரிமையாளரின் மகள் தான் இந்த ரியா ஷிபு. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமான இவர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவரது சகோதரர் ஹ்ரிது ஹரூன் டியூட் திரைப்படத்தில் மமிதா பைஜூவின் காதலனாக நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது. இப்படியான நிலையில் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள சர்வம் மாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரியா ஷிபு. வழக்கமான பேய்களைப் போல் இல்லாமல் க்யூட்டான ஜென் ஸி பேயாக இவர் இந்த படத்தில் நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.
சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா ஜோதிகா
சர்வம் மாயா படத்தில் ரியா ஷிபுவின் நடிப்பை பாராட்டி சூர்யா மற்றும் ஜோதிகா அவருக்கு வாழ்த்துரையை அனுப்பியுள்ளார்கள். "சர்வம் மாயா படம் படத்தில் உங்களது நடிப்பை ரொம்பவே ரசித்தோம். மிக இயல்பான அதே நேரம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நடிப்பு. மேலும் இதுபோல பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்." என சூர்யா ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Simplyyy over the mooonnn!!!! Thank youuu so so muchh @Suriya_offl sir #jyothika maam !! 🥹❤️ to take the time and effort to send me this hamper as a token of appreciation for my performance really means a lot to me. Accepting this on behalf of the entire team of #SarvamMaya ❤️🌟 pic.twitter.com/JtIMQ4hCsm
— riya (@riyashibu_) February 18, 2026























