ஆர்.ஜே பாலாஜி காட்டில் மழை...சூர்யாவுக்கு வில்லனாவும் நடிக்கிறாரா ?

சூர்யாவின் 45 ஆம் ஆவது படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜி அதே படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

சூர்யா 45

கங்குவா படத்திற்குப் பின் சூர்யா அடுத்தடுத்து இரு ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார். முதலாவது படம் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரெட்ரோ. சூர்யா , பூஜா ஹெக்டே , ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45 ஆவது படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார் .

Continues below advertisement

சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்.ஜே பாலாஜி

ரேடியோவில் ஆர்.ஜேவாக தனது கரியரைத் தொடங்கி பின் நகைச்சுவை நடிகராக சினிமாவிற்கு நுழைந்தவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நடித்த எல்.கே ஜி படத்திற்கு கதையை அவரே திரைக்கதை எழுதினார். அடுத்தபடியாக நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். கமர்சியலாக இரு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தபடியாக முக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை அவர் இயக்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். இப்படியான நிலையில் முக்குத்தி அம்மன் 2 சுந்தர் சி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆர்.ஜே பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் 45 ஆவது படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்க இருந்த இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்து பின் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளார். த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிப்பது படப்பிடிப்பின் போது வெளியான புகைப்படங்கள் வழியாக தெரிய வந்தது. தற்போது இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி சூர்யாவுக்கு எதிர் தரப்பு வழக்கறிஞராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி  சூர்யா இருவரின் கதாபாத்திரங்களும் கொள்கை ரீதியாக மோதிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் என்றும் படத்தில் மற்ற வில்லன்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola