நடிகர் சூர்யாவின் 42-வது திரைப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சூர்யா இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதால் இப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்க முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். இந்தப் படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பால் ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர். 


சூர்யா 42


சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும்  சூர்யா-42  படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ராஜா, வம்சி பிரமோத் மற்றும் கே.ஈ. ஞானவேல் ராஜா கூட்டணியில் இணைந்து தயாரிக்கிறது. இந்தப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 


சூர்யாவும் சிறுத்தை சிவாவும் கூட்டணி சேரும் முதல் திரைப்படம் இது. இந்தப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்தது. இந்தப்படப்பிடிப்பில் படத்தின் கதாநாயகி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன என கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


வெற்றிப்பட இயக்குநர் சிறுத்தை சிவா: 


இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றுமே வெற்றி பெறும். அதோடு ரசிகர்களுக்கும் ஃபீல் குட் படங்கள் பார்த்த திருப்தி இருக்கும்.ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இயக்குநர்.  அவர் இதுவரையில் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.   சூர்யா 42 திரைப்படம் ஒரு வரலாற்று பின்னணியை மையமாக வைத்தும் 3D தொழில்நுட்பம் கொண்டு படத்தை உருவாக்குகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கார்க்கி வசனம் எழுத, தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


சூர்யாவின் பிஸி ஷெட்யூல் :


சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் "வணங்கான்"  திரைப்படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் "வாடிவாசல்" திரைப்படத்திலும் பிஸியாக உள்ளார் சூர்யா. அடுத்தடுத்து வெளியாகப்போகும் படங்களால் சூர்யா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.  நடிகர் சூர்யாவிற்கு சமீபத்தில் தான் "சூரரைப் போற்று" படத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் டோலிவுட் அறிமுகம் :


திஷா பதானி 2015-ஆம் ஆண்டு வருண் தேஜ் நடித்த லோஃபர் திரைப்படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இருப்பினும்  திஷா பதானி நடிப்பு டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தது. சூர்யா 42 திஷா பதானியின் ஏரண்டவி தென்னிந்திய படமாகும். தமிழில் அறிமுகமாகும் திஷா பதானியின் நடிப்பு பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், அறிமுக படத்திலேயே பிரபல நடிகருடன் நடிக்கிறார் என்று பாரட்டும் குவிந்துள்ளது.