இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தின் 2ம் பாகமாக உருவாகியுள்ள படம் ஜெயிலர் 2.

Continues below advertisement

ஜெயிலர் 2:

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அல்ல போலேலோ பாடல் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஒன் நேம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த பாடல் தற்போது வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பாடலை ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற அலப்பறை கிளப்புறோம் என்ற பாடலை எழுதிய சூப்பர் சுப்பு  எழுதியுள்ளார்.  

Continues below advertisement

தலைவன் நிரந்தரம்:

ஜெயிலர் 2 படம் ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. ரஜினிகாந்தின் திரை புகழை புகழும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தலைவன் நிரந்தரம் என்ற உற்சாகமான வார்த்தைகளுடன் பாடல் அமைந்துள்ளது.  மேலும், இந்த லிரிக்கல் வீடியோவில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பிடித்துள்ளது. 

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளர். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மிதுன் சக்ரபோர்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சுராஜ், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர்களுடன் இணைந்து ஹிரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

பட்ஜெட்:

சுமார் 250 கோடி முதல் 300 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கான தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தியா மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஜெயிலர் 2 படம் வெளியாகிறது. இது மட்டுமின்றி அரபு நாடுகளிலும் இந்த படம் வெளியாகிறது.