இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 படம் கடந்த மாதம் வெளியானது.

Continues below advertisement

ஓடிடியிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2:

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன், படம் உலகளவில் ரூபாய் 900 கோடி வசூலைக் குவித்தது. இந்த படம் கடந்த 12ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஓடிடி தளத்திலும் ஜெயிலர் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. பெரும்பாலும் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களுக்கு ஓடிடி தளங்களில் பெரியளவில் வரவேற்பு இருக்காது. காந்தாரா போன்ற பல மெகாஹிட் படங்கள் அதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

Continues below advertisement

ரசிகர்கள் கொண்டாட்டம்:

ஆனால், ஜெயிலர் 2 படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த அதே வரவேற்பு ஓடிடி தளத்திலும் கிடைத்து வருகிறது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ்ஜேசூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், சுராஜ், யோகிபாபு என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், ஜாக்கி ஷெராஃப் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நமோ நாராயணா நடித்த மூர்த்தி கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மூர்த்தி என்ற அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ரசித்து சிரிக்க வைத்தது. ரஜினிகாந்தும் அவருடன் இணைந்து காமெடி காட்சிகளில் அசத்தலாக நடித்திருப்பார்.

தர்மனுக்காக வெயிட்டிங்:

தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவில் நடப்பாண்டில் வெளியான படங்களிலே ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய வசூலைக் குவித்த படமாக அமைந்தது. வட இந்தியாவில் பிவிஆர் திரையரங்க பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் இந்த படம் ரூபாய் 1000 கோடி வசூலைக் குவித்திருக்கும். ரஜினி தற்போது தர்மன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், படம் 3ம் பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிந்திருப்பதால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காகவும் உற்சாகமாக காத்துள்ளனர். ஜெயிலர் 2 படத்தின் வெற்றி, அனிருத்தின் திருமணம், தர்மன் படப்பிடிப்பு என ரஜினிகாந்திற்கு இந்தாண்டு மிகவும் உற்சாகமான ஆண்டாகவே சென்றுள்ளது.