தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், நெல்சன் இயக்கத்திலே ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

Continues below advertisement

ரஜினியின் புதிய படம்:

ரஜினிகாந்த் இதற்கு இடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. பின்னர், அவருக்கு பதில் சிபி சக்கரவர்த்தி ஒப்பந்தமானார். ஆனால், அவரும் விலகியதையடுத்து தற்போது அர்ஷத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். 

சத்தமே இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தின் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசனும், கதாநாயகனாகிய ரஜினிகாந்தும் பங்கேற்றனர். மேலும் படக்குழுவினரும் பங்கேற்றனர். 

Continues below advertisement

நடிப்பது யார்?

இந்த படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார். ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ஆடை வடிவமைப்பாளராக ஸ்ருதிமஞ்சரி பணியாற்றுகிறார். டிசைனராக கபிலன் செல்லையா பணியாற்றுகிறார். 

தர்மன்:

தர்மன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஆக்ஷன் குடும்ப படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அர்ஷத் மாரிமுத்து இதற்கு முன்பு இயக்கிய ஓ மை கடவுளே, டான் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், தர்மன் படத்தின் படப்பிடிப்பையும் துரிதமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி:

படத்தின் போஸ்டரில் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை மையத்தில் ஒருவரை அடித்து கையில் அறுவை சிகிச்சை கத்தியுடன் இருப்பது போல உள்ளது. இந்த படத்திலும் ரஜினிகாந்த் தனது வயதுக்கு ஏற்ப வயதான தோற்றத்திலே நடிக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வரும் சூழலில், தர்மன் மற்றும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் உருவாக உள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.